வாட்ஸ்அப் மூலம் ஜியோமார்ட் அறிமுகம்! 

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 27 ஏப்ரல் 2020 11:43 IST
ஹைலைட்ஸ்
  • ஜியோமார்ட் என்பது ரிலையன்ஸ் சில்லறை விற்பனையின் ஒரு முயற்சியாகும்
  • ரிலையன்ஸ் அதிகாரப்பூர்வ அறிக்கை வரவில்லை
  • ஜியோமார்ட்டுக்கான வாட்ஸ்அப் எண் 8850008000

வாடிக்கையாளர்கள் ஜியோமார்ட்டின் வாட்ஸ்அப் எண்ணைச் தங்கள் போன்களில் சேர்க்க வேண்டும்

ரிலையன்ஸ் சமீபத்தில் Facebook உடன் ஒரு கூட்டணியை உருவாக்கியது. இதன் கீழ் இந்த இந்திய நிறுவனத்தில் ரூ.43,574 கோடியை முதலீடு செய்வது குறித்து பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ரிலையன்ஸ் தனது ஆன்லைன் இ-காமர்ஸ் போர்ட்டல் ஜியோமார்ட்டைத் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் சில்லறை விற்பனையின் ஈ-காமர்ஸ் பிரிவு, மும்பையின் சில பகுதிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு மத்தியில், ஜியோமார்ட் அதன் அம்சங்களை பொது மக்களுக்கு அணுகுவதற்காக, வாட்ஸ்அப் இயங்குதளத்தின் உதவியை எடுத்து வருகிறது.

அதன் சேவைகளை சோதிக்கத் தொடங்குவதன் மூலம், ரிலையன்ஸ் ஜியோமார்ட் இப்போது Amazon மற்றும் வால்மார்ட்டின் Flipkart-ஐ சவால் செய்ய தயாராக உள்ளது. மறுபுறம், ஜியோமார்ட்டுடனான கூட்டு மூலம், கடைகள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான முக்கிய வழியாக வாட்ஸ்அப் மாறும் என்று பேஸ்புக் நம்புகிறது.

ஜியோமார்ட்டின் சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் ஜியோமார்ட்டின் WhatsApp எண் 8850008000-ஐ தங்கள் போன் தொடர்புகளில் சேர்க்க வேண்டும். வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ய ஜியோமார்ட் ஒரு இணைப்பை வழங்குகிறது. ஆர்டர் வழங்கப்பட்டதும், நிறுவனம் அதை வாட்ஸ்அப்பில் ஒரு மளிகைக் கடையுடன் பகிர்ந்து கொள்கிறது.

இதன் பின்னர், ஜியோமார்ட்லைட் வலைத்தளத்தின்படி, வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்கள் பற்றிய அறிவிப்பு மற்றும் கடையின் விரிவான விவரங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது, ​​ரிலையன்ஸ் அதிகாரப்பூர்வ அறிக்கை அதில் வரவில்லை. மகாராஷ்டிராவின் நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் பகுதிகளில் பைலட் சோதனையின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரியில் ரிலையன்ஸ் சில்லறை விற்பனை ஜியோமார்ட்டை அறிமுகப்படுத்தியது.

Reliance ஜியோ இயங்குதளம், ரிலையன்ஸ் சில்லறை மற்றும் வாட்ஸ்அப் இடையேயான புதிய கூட்டாண்மை காரணமாக, வாடிக்கையாளர்கள் விரைவில் JioMart-ல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்து "தங்கள் அருகிலுள்ள மளிகைக் கடைகளுக்கு எளிதாக அணுகலாம்" என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிக்கை கூறுகிறது. 

© 2020 Bloomberg LP


How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook, Reliance Jio, JioMart, WhatsApp
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  2. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  3. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  4. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  5. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  6. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  7. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  8. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
  9. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  10. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.