இந்தியாவில் புதிய JioPOS Lite ரீசார்ஜ் செயலியை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. JioPOS Lite செயலியை Google Play Store-ல் இருந்து ஆண்ட்ராய்டுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இப்போது iOS பதிப்பு எதுவும் இல்லை.
JioPOS Lite செயலியை பயன்படுத்தி, எந்தவொரு நபரும் Jio Partner-ராக மாறலாம். அதற்கு செயலியை இன்ஸ்டால் செய்து, ஜியோ எண் மூலம் பதிவு செய்தவுன், செயலி உங்கள் பணப்பையில் (wallet) பணத்தை ஏற்றுவதற்கு கேட்கும். Jio Partner ஆன பிறகு, எந்தவொரு பயனரும் மற்ற ஜியோ வாடிக்கையாளர்களின் கணக்குகளை ரீசார்ஜ் செய்து கமிஷனைப் பெறலாம். வழங்கப்படும் பிரிவுகள் (denominations) ரூ.500, ரூ.1,000, மற்றும் ரூ.2,000 ஆகும். JioPOS Lite செயலி மூலம் மற்ற எண்களை ரீசார்ஜ் செய்யும் Jio Partner-களுக்கு, அதாவது ஒவ்வொரு ரூ.100-க்கு ரீசார்ஜுக்கும், (ரூ.4.166) 4.16 சதவீத கமிஷனை வழங்குகிறது. செயலியில் வருவாய் சரிபார்க்க அனுமதிக்க பாஸ்புக் அம்சமும் உள்ளது.
கூடுதலாக, இந்த செயலியில், கிடைக்கக்கூடிய அனைத்து ரீசார்ஜ்களையும் பயனர்களுக்கு தெரிவிக்கும் FAQ பிரிவும் உள்ளது.
குறிப்பு: மைஜியோ செயலி அல்லது ஜியோ வலைத்தளத்தைப் பயன்படுத்தியும் மற்றவர்களின் ஜியோ ப்ரீபெய்ட் கணக்குகளை ரீசார்ஜ் செய்யலாம். ஆனால், அந்த ரீசார்ஜ்களில் ஜியோ உங்களுக்கு எந்த கமிஷனை வழங்காது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்