ஜியோ போன்களில் 'படிப்படியாக'த்தான் யூடியூப், வாட்சப் கிடைக்கும்: பயனர்கள் ஏமாற்றம்

ஜியோ போன்களில் 'படிப்படியாக'த்தான் யூடியூப், வாட்சப் கிடைக்கும்: பயனர்கள் ஏமாற்றம்

ஜியோ போன்களில் இதுவரை யூடியூப் ஆப் வந்தபாடில்லை.

ஹைலைட்ஸ்
  • ஜியோ போனில் ஆகஸ்ட் 15 முதல் யூடியூப் கிடைக்கும் என முன்னர் அறிவிப்பு.
  • எனினும் ஜியோ ஸ்டோரில் இதுவரை யூடியூப் செயலியைக் காணவில்லை.
  • படிப்படியாக விரைவில் அனைவருக்கும் யூடியூப் பயன்படுத்தக் கிடைக்கும்.
விளம்பரம்

சொன்னபடி யூடியூப், வாட்சப் செயலிகள் ஆகஸ்ட் 15இல் கிடைக்காததால் ஜியோ போன் பயனர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜியோ 4ஜி போன்களை அந்நிறுவனத்தின் கணக்குப்படி இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் புதிய மாடல் ஒன்றும் இன்று அறிமுகமாகிறது.

ஜியோ போன் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாட்சாப், யூடியூப் ஆகிய இரண்டு மிகப் பிரபலமான ஆப்கள் தங்களது போனில் இந்த சுதந்திர தினம் முதல் கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். கடந்த மாதம் நடந்த ஒரு கூட்டத்தில் ஜியோ போனில் யூடியூபும் வாட்சப்பும் பயன்படுத்தும் டெமோ ஒன்று செய்திகாட்டப்பட்டதுடன் இவ்வசதிகள் இந்த சுதந்திர தினம் முதல் அனைவரது போன்களிலும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் "இச்செயலிகள் உடனடியாக அனைவருக்கும் கிடைக்காது. பிற செயலிகள் போல ஜியோ ஸ்டோரில் சென்று வேண்டிய அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதாக இல்லாமல், குறிப்பிட்ட சிலர்களுக்கே இவை தற்போதைக்குக் கிடைக்கும். போகப்போக படிப்படியாக சில காலத்தில் அனைவருக்கும் அவர்களது ஜியோ போனில் வாட்சாப், யூடியூப் பயன்படுத்தக் கிடைக்கும்" என ரிலையன்ஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஜியோ போன் பயனர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே என்டிடிவி யூடியூப் மட்டுமே உடனடியாக ஜியோ போன்களில் கிடைக்கும். வாட்சப் கிடைப்பது சிறிது காலம் தள்ளிப்போகலாம் என செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


எப்போது வரும் யூடியூப்:

செட்டிங்ஸ் --> டிவைஸ் --> சாப்ட்வேர் அப்டேட் என்னும் மெனுவில் சென்று புதிய சாப்ட்வேர் உங்களுக்குத் தரவிறக்கக் கிடைக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் அதனை டவுன்லோட் செய்துகொள்ளவும். டவுன்லோடு செய்தவுடன் ஜியோ ஸ்டோரில் சென்று பார்த்தால் தற்போது யூடியுப் செயலி பதிவிறக்கிக் கொள்ளத் தயாராக இருக்கும். என்டிடிவியினர் கைவசம் இருக்கும் போனில் இன்னும் இந்த அப்டேட் காணக்கிடைக்கவில்லை. அடுத்த வாரத்துக்குள் பல பயனர்களுக்கு இந்த அப்டேட் வரும். படிப்படியாக சில தினங்களில் அனைவருக்கும் இது கிடைக்கும்.

வாட்சப்பும் இதேபோன்றே சிறிது காலத்தில் படிப்படியாக அனைவருக்கும் அப்டேட் கிடைத்தவுடன் ஜியோ ஸ்டோர்களில் கிடைக்கும்.

என்ன செய்ய முடியாது:

ஆண்டிராய்ட், ஆப்பிள் போன்களில் உள்ளது போன்ற பயன்பாட்டு அனுபவம் ஜியோ போன்களிலும் இருக்கும் என அந்நிறுவனம் கூறினாலும் சில அம்சங்கள் ஜியோ போனின் யூடியூபிலும் வாட்சப்பிலும் கிடைக்காது. எடுத்துக்காட்டாக ஜியோ யூடியூபில் வீடியோக்களை ஆப்லைனில் பார்ப்பதற்கு டவுன்லோட் செய்துவைத்துக்கொள்ள முடியாது. போலவே வாட்சப்பில் வாய்ஸ், வீடியோ கால்களும் செய்யமுடியாது. வாட்சப் பேமென்ட் கட்டணம் செலுத்தும் சேவையும் இதில் கிடைக்காது. டி9 விசைப்பலகையைக் கொண்டே தட்டச்சு செய்யமுடியும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Jio Phone, YouTube, WhatsApp, Jio Phone YouTube App
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »