கூகுள் நிறுவனம் புதிதாக கோர்மோ் என்ற வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றிய விவரங்களை இங்குக் காணலாம்.
கூகுள் நிறுவனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், புதிதாக கோர்மோ ஜாப்ஸ் (Kormo Jobs) என்ற செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வங்காளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், 2019 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவிற்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று புதனன்று இந்தியாவில் கோர்மோ ஜாப்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு ஒரு சுயவிவரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு ரெஸ்யூம் உருவாக்கியப் பின், அதற்கு ஏற்ற வேலைகளையும் தேடி பயன்பெற முடியும்.
ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'லிங்க்ட்இன்' நாகுரி, டைம்ஸ்ஜாப்ஸ் உள்ளிட்ட சில தளங்கள் வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கி வருகின்றன. அதற்குப் போட்டியாக அனைவரின் நம்பக்த்தைப் பெற்ற கூகுள் நிறுவனமும் 'கோர்மோ ஜாப்ஸ்' செயலியை உருவாக்கியுள்ளது.
(கூகுளின் கோர்மோ ஜாப்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்ய இங்குக் க்ளிக் செய்யவும்)
இந்த ஆப் மூலம் உங்கள் படிப்பு, வயது, இருப்பிடம், தகுதி உள்ளிட்ட சுயவிவரங்களின் அடிப்படையில் உங்களுக்கான பொருத்தமான வேலைகளைப் பரிந்துரை செய்யும். மேலும், துறை சார்ந்த வேலைகளையும் தனியாக தேட முடியும்.
ஏற்கனவே, கூகுள் இணையதளத்தில் ஜாப்ஸ் என்று தனிப்பிரிவு உள்ளது. இதற்கு கூகுள் ஜாப்ஸ் என்று பெயர். பொதுவாக வேலை தேடும் போது, தேடுபொறியில் முதல் பக்கத்தில் கூகுள் ஜாப்ஸ் தோன்றும். அதை க்ளிக் செய்து பார்த்தால், வேலைவாய்ப்பு செய்திகளை வழங்கும் மற்ற இணையதளங்கள் காட்டப்படும். அதன் மூலமாக பலர் வேலைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
ஏப்ரல் 2018 இல் இந்த கூகுள் ஜாப்ஸ் உருவாக்கப்பட்டது. இதற்காக ஆசான் ஜாப்ஸ், ஃப்ரெஷர்ஸ் வேர்ல்ட், ஹெட்ஹான்சோஸ், ஐபிஎம் டேலண்ட் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், லிங்க்ட்இன், கியூக்ஸ் மற்றும் ஷைன் உள்ளிட்ட வேலைவாய்ப்பு இணையதளங்களுடன் கூட்டுசேர்ந்தது.
.
Should the government explain why Chinese apps were banned? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்