ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தளமான ப்ளிப்கார்ட், புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அமேசான் ப்ரைம் திட்டத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம், ப்ளிப்கார்ட் ப்ளஸ் என்று பெயரில் வெளியாக உள்ளது.
வரும் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ளிப்கார்ட் ப்ளஸ் வசதியில், இலவச விரைவு டெலிவரி, புதிய பொருட்களுக்கான சலுகைகள் போன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன
அமேசான் ப்ரைம், ப்ளிப்கார்ட் ப்ளஸ் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மாத/வருட சந்தா செலுத்தி இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ப்ளிப்கார்ட் ப்ளஸ் திட்டத்தில், புள்ளி கணக்கில் ‘ப்ளஸ் காயின்ஸ்’ பெற்று, இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் ப்ளிப்கார்ட் ப்ளஸ் திட்டத்தில் இணைவதற்கு வாடிக்கையாளர் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை
ப்ளிப்கார்ட்டில் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும், ரிவார்ட் பாயின்ட்ஸ் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம், ப்ளிப்கார்ட் ப்ளஸ் வசதியினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக, ப்ளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனை தினங்களில் இந்த திட்டம் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த தகவல்கள் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என்று ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது
ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் தின விற்பனை, பிக் ஷாப்பிங் தின விற்பனை போன்ற சிறப்பு விற்பனை நாட்களில், சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள இந்த திட்டம் பயன்படும். “வாடிக்கையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் சிறப்பாக்க, ப்ளிப்கார்ட் ப்ளஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2018 சுதந்தர தினத்தன்று இந்த திட்டம் வெளியிடப்படும்” என்று ப்ளிப்கார்ட் தலைமை நிர்வாகி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்