வாட்ஸ்-அப் செயலியில் 5 முறைக்கு மேல் ஃபார்வர்டு செய்யப்படும் தகவல்கள் குறித்து அறியும்படியான புதிய அப்டேட்டை அந்த நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை தங்களது போனில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேட் தானாக கிடைக்கும்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலி மூலம் அதிக வதந்திகள் பரவி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய அப்டேட் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடிக்கடி ஃபார்வர்டு செய்யப்படும் மெஸேஜ் Frequently Forwarded என்ற டேக் மூலம் தெரிவிக்கப்படும். கடந்த மார்ச் மாதம் முதலே இந்த அப்டேட் டெஸ்டிங்கில் இருந்து வருகிறது.
“முன்னரே அதிக முறை ஃபார்வர்டு செய்யப்பட்ட மெஸேஜை எங்களது பயனர் ஒருவருக்கு வரும்போது, அதில் இரண்டு அம்புக்குறி போட்டு Frequently Forwarded என்ற டேக் கொடுக்கப்படும். இதன் மூலம் செயின் மெஸேஜ்களை சுலபமாக அடையாளம் காணலாம்” என்று வாட்ஸ்-அப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் புதிய அப்டேட் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்-அப் நிறுவனம், ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்வதற்கான ‘வாட்ஸ்-அப் பே' வசதியை சீக்கிரமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய வசதி, வாட்ஸ்-அப் செயலியில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப் பே-வை கடந்த ஓராண்டாக அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது.
IANS தகவல்களுடன் எழுதப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்