வைரஸ் டிராக்கிங் செயலியான 'கொரோனா கவாச்' எப்படி செயல்படுகிறது? முழு விவரம் இங்கே!

வைரஸ் டிராக்கிங் செயலியான 'கொரோனா கவாச்' எப்படி செயல்படுகிறது? முழு விவரம் இங்கே!

Photo Credit: Google Play Store

கொரோனா கவாச்சை, கூகுள் பிளே ஸ்டோர் வழியாக இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்

ஹைலைட்ஸ்
  • கொரோனா கவாச், பயனரின் இருப்பிடத்தை, 1 மணிநேர அடிப்படையில் கண்காணிக்கிறது
  • கொரோனா கவாச் இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது
  • பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு நிறங்களில் ஆபத்து நிலையை வகைப்படுத்துகிறது
விளம்பரம்

கோவிட்-19 டிராக்கரான கொரோனா கவாச், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் (MHFW) இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அதன் பீட்டா கட்டத்தில், கொரோனா கவாச் செயலி ஒரு நபரின் ஸ்மார்ட்போன் டேட்டாவை பயன்படுத்தி, அவர்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், நாவல் கொரோனா வைரஸுக்கு (SARS-CoV-2) ஆளாக நேரிடும் அபாயம் இருந்தால் எச்சரிக்கவும் செய்கிறது. அதிகாரப்பூர்வ விளக்கத்தின்படி, இந்த செயலி கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை வழங்குவதையும், தகவல்களைப் பிடிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த செயலி இப்போது ஆண்ட்ராய்டுக்கு மட்டுமே கிடைக்கிறது.

கொரோனா கவாச், Google Play Store வழியாக பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இது ஒரு மணி நேர இடைவெளியில் பயனரின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் மற்றும் COVID-19-க்கு நேர்மறையாக சோதிக்கப்பட்ட ஒரு நபருடன் அவர்கள் தொடர்பு கொண்டார்களா என்று கூறுகிறது.


கொரோனா கவாச் எப்படி செயல்படுகிறது? இங்கே படிக்கவும்! 

கொரோனா கவாச் செயலியைத் திறந்தவுடன், இது MeitY மற்றும் MHFW-ஆல் செயலியை உருவாக்கியுள்ளது என்று ஒரு திரையைக் காட்டுகிறது.

Corona Kavach Welcome Screen Coronavirus

கொரோனா கவாச் வரவேற்புத் திரை.
Photo Credit: Corona Kavach

மேலும், கொரோனா கவாச் செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பயனர்களுக்குக் கூறுகிறது. "கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சரியான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்" என்று செயலித் திரை கூறுகிறது.
Corona Kavach Message Coronavirus

"கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சரியான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்" என்று இரண்டாவது வரவேற்புத் திரை கூறுகிறது.
Photo Credit: Corona Kavach

அடுத்த திரையானது கொரோனா கவாச் செயலியின் சமூக கண்காணிப்பு அம்சத்தைப் பற்றிய ஒரு மறுப்பைக் (disclaimer) காட்டுகிறது, இது ஒரு கோவிட்-19 நேர்மறை பயனருடன் யாராவது நெருங்கிய தொடர்பு வந்திருந்தால், எச்சரிக்க பயன்படுகிறது. இருப்பிடத் டேட்டா ஆஃப்லைனில் இருக்கும் என்றும், ஆபத்து இருக்கும்போது மட்டுமே பகிரப்படும் என்றும் செயலி கூறுகிறது.
Corona Kavach Community Tracking disclaimer Coronavirus

கொரோனா கவாச் சமூக கண்காணிப்பு மறுப்பு
Photo Credit: Corona Kavach

நிபந்தனைகளுக்குப் பிறகு, கொரோனா கவாச் ஒரு பயனரின் போனில் இருப்பிடம் மற்றும் கோப்புகளை (files )அணுக அனுமதி கேட்கிறது.
Corona Kavach permissions Coronavirus

கொரோனா கவாச் அனுமதிகள்

ஒப்புக்கொண்டவுடன், பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யுமாறு கேட்கிறது, இது one-time-password (OTP) வழியாக சரிபார்க்கப்படுகிறது.
Corona Kavach OTP screen Coronavirus

கொரோனா கவாச் OTP திரை.

அதன் பிறகு, செயலி உங்கள் மொபைலில் டேட்டாவை சேமிக்கிறது என்று ஒரு செய்தியைக் காட்டுகிறது. கொரோனா கவாச் செயலி ஒரு நபருக்கு அவர்களின் நிலையை சொல்கிறது என்றும் கூறுகிறது, இது பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது:

பச்சை - அனைத்தும் நல்லது (பாதுகாப்பானது)

ஆரஞ்சு - ஒரு மருத்துவரைப் பாருங்கள் (சாத்தியமான ஆபத்து)

மஞ்சள் - தனிமைப்படுத்தல் (ஆபத்து)

சிவப்பு - தொற்று பாதித்துள்ளது

தொடக்கத் திரையில் உள்ள பாப்-அப் செய்தி, ஒவ்வொரு மணிநேரமும் செயலி தானாகவே பயனரின் நிலையைச் சரிபார்க்கும் என்றும், கோவிட்-19-க்கு சாதகமாக சோதிக்கப்பட்ட எவருடனும், கடந்த காலங்களில் அவர்கள் சந்தித்தாலோ அல்லது சந்திக்க இருந்தாலோ அறிவிப்புகள் மூலம் எச்சரிக்கையாக இருக்கு வேண்டும் என்றும் கூறுகிறது.

அவர்களின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க அனுமதிக்கும் பொருட்டு, அதன் பின்னணியில் செயலியை இயக்க அனுமதிக்க பரிந்துரைக்கிறது.

Corona Kavach background running alert Coronavirus

கொரோனா கவாச் பின்னணி இயங்கும் எச்சரிக்கை.

செயலிக்கான முகப்புப்பக்கம் Coronavirus தொற்றுநோய் பற்றிய புள்ளிவிவரங்களைக் காட்டுகிறது. கீழே மூன்று பொத்தான்கள் உள்ளன - பதிவேற்றம், கொரோனா கவாச் (லச்சினை (logo)) மற்றும் ஆப்ஷன்ஸ்.
Corona Kavach homescreen Coronavirus

கொரோனா கவாச் முகப்புத்திரை.

கொரோனா கவாச் லச்சினையை (logo) கிளிக் செய்தால், ஒரு மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கும். இது உங்கள் இருப்பிடத்தை செயலி கண்காணிக்கும் காலம் ஆகும். முடிந்ததும், இது பயனரின் நிலையை பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் காண்பிக்கும், மேலும் அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேலும் பரிந்துரைக்கும். கண்காணிக்கும் போது இது எப்படி இருக்கும் என்பது இங்கே:
Corona Kavach Tracking Coronavirus

கொரோனா கவாச் கண்காணிப்பு அனிமேஷன்.

கொரோனா கவாச்சில் உள்ள ‘பதிவேற்றம்' ஆப்ஷன் ஒரு தனிப்பட்ட ஐடியைப் பதிவேற்றுவதற்கான ஆப்ஷனை வழங்குகிறது. இப்போது, ​​இந்த தனித்துவமான ஐடி என்பது செயலியை அமைப்பதற்கான செயல்முறை முழுவதும் வெளிப்படுத்தப்படாத ஒன்று. எனவே, யூஸ்கேஸை தீர்மானிக்க முடியாது.
UPLOAD Cooronavirus

கொரோனா வைரஸ் தனிப்பட்ட ஐடி பதிவேற்றம்

ஆப்ஷன்ஸ் பொத்தான் ஒரு தனி பக்கத்தைத் திறக்கிறது, இது சுவாசப் பயிற்சி மற்றும் வெளியேறுவதற்கான (logging out) ஆப்ஷனுடன் கேள்வித்தாள் ஆப்ஷன்களைக் காட்டுகிறது. ஒரு பயனருக்கு சுவாசப் பிரச்சினைகள் இல்லை என்பதை உறுதி செய்வதே சுவாசப் பயிற்சி.
Corona Kavach Options screen Coronavirus

கொரோனா கவாச் ஆப்ஷன்கள் திரை


மறுபுறம், கேள்வித்தாள், உடல்நலம் தொடர்பான பல கேள்விகளைக் கேட்கிறது. கேள்வித்தாளை நிரப்பியதும், கொரோனா கவாச் செயலி, பயனர்கள் பாதுகாப்பாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்கிறது. எனவே, இந்த கொரோனா கவாச் கேள்வித்தாளை பெரிய ஆராய்ச்சி பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறோம்.

இது கொரோனா கவாச் செயலியின் பீட்டா பதிப்பு மற்றும் நிறைய பயனர்கள் இல்லாததால், இந்த செயலி எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் என்பதைக் கூறுவது கடினம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Coronavirus, COVID 19, Corona Kavach
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »