கோவிட்-19: கைக்கழுவ நினைவூட்டும் புதிய செயலி! - சாம்சங்கின் அசத்தல் முயற்சி! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 18 ஏப்ரல் 2020 12:43 IST
ஹைலைட்ஸ்
  • இந்த செயலி பயனர்களுக்கு 25 விநாடிகள் கழுவும் நேர கவுண்டரை வழங்குகிறது
  • குழாய் திறந்து, சோப்பு போட 5 விநாடிகள், கை கழுவ 20 ஆகும்
  • வழிமுறைகளைத் தவறவிட்டால் பயன்பாடு பயனர்களுக்கு அறிவிக்கும்

ஹேண்ட் வாஷ் செயலியை, சாம்சங் ஆராய்ச்சி நிறுவனம்-பெங்களூர் உருவாக்கியது

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துகொள்ள, கைகளை கழுவுவது அவசியம். இதை நினைவூட்டும் வகையில் Samsung 'ஹேண்ட் வாஷ்' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

வைரஸை எதிர்கொள்ள, மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்த முயற்சியில் தற்போது சாம்சங்கும் இணைந்துள்ளது. சாம்சங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்-பெங்களூர் (எஸ்.ஆர்.ஐ-பி) ஒரு 'ஹேண்ட் வாஷ்' செயலியை உருவாக்கியுள்ளது. சாம்சங்கின் கேலக்ஸி வாட்சில் உள்ள செயலி, பயனர்களுக்கு கை கழுவுதல் பற்றி நினைவூட்டுகிறது. இந்த செயல்பாடு குறைந்தது 20 வினாடிகள் நீடிக்கும் என்பதை, செயலி உறுதி செய்கிறது. இந்த செயலி, கேலக்ஸி ஸ்டோரிலும் கிடைக்கிறது.

"COVID-19 பரவுவதைத் தடுக்க, அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) பரிந்துரைத்துள்ளது. 20 விநாடிகள் கை கழுவினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்" என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

"'ஹேண்ட் வாஷ்' செயலி, பயனர்கள் தினசரி கழுவும் வழக்கத்தை உள்ளுணர்வாக கண்காணிக்க அனுமதிக்கிறது. "குழாயை திறந்து சோப்பைப் பயன்படுத்துவதற்கு ஐந்து வினாடிகள், 20 வினாடிகள் கை கழுவலுக்கானவை. இந்த வழிமுறையை தவறவிட்டால், செயலி பயனர்களுக்கு அறிவிக்கும்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செயலி, ஒவ்வொரு முறையும் பயனர் கழுவத் தொடங்கும்போது, நேரத்தைக் கண்காணித்து, கைக் கழுவிய 25 விநாடிகளுக்குப் பிறகு கருத்துக்களையும் வழங்குகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy Watch, COVID 19, Coronavirus
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 தொடர் விவரங்கள் கசிந்தன; புரோ மேக்ஸ் மாடலில் டைமன்சிட்டி 9600 புரோ சிப்செட் இடம்பெறலாம்!
  2. டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5G டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  3. 150W சவுண்ட் மற்றும் 4 EQ மோட்களுடன் போர்ட்ரானிக்ஸ் பியூர் சவுண்ட் புரோ X2 ஹோம் தியேட்டர் இந்தியாவில் அறிமுகம்
  4. ஷியோமி பவர் பேங்க் 5i 20000mAh இந்திய அறிமுக தேதி உறுதி; முக்கிய அம்சங்கள், விவரங்கள் வெளியீடு!
  5. 9-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டத்துடன் மோட்டோ பேட் 70 குரூவ் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!
  6. சாம்சங் 'பேக் டூ ஸ்கூல்' விற்பனை: கேலக்ஸி S26, டேப் S11 அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
  7. கூகுளின் ஃபிட்பிட் ஏர் (Fitbit Air) அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக அமேசான் இந்தியாவில் கண்டறியப்பட்டது
  8. ரெட்மி நோட் 17 இந்திய அறிமுக தேதி கசிந்தது; முக்கிய அம்சங்களை டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார்!
  9. பெரிய பேட்டரியுடன் விரைவில் ஷியோமி பேட் 9 அறிமுகமாகலாம்; கசிந்த முக்கிய அம்சங்கள்!
  10. சாம்சங் கேலக்ஸி A55, A35 மாடல்களில் ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ஒன் UI 9 சோதனை பதிப்புகள் கண்டறியப்பட்டன!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.