இந்தியால 10 கோடி பேர் ChatGPT யூஸ் பண்றாங்களா? வாராந்திர பயனர்களில் இந்தியா 2-வது இடம்! மாணவர்கள் தான் டாப்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 16 பிப்ரவரி 2026 18:50 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் வாரந்தோறும் ChatGPT-ஐ பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 10 க
  • உலகிலேயே அதிக மாணவர்கள் ChatGPT பயன்படுத்தும் நாடாக இந்தியா முதலிடம் பிடி
  • அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக OpenAI நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இந்த

OpenAI இன் ChatGPT-க்கான இரண்டாவது பெரிய பயனர் தளத்தை இந்தியா கொண்டுள்ளது.

Photo Credit: Reuters

இன்னைக்கு நம்ம பார்க்கப்போற செய்தி நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு விஷயத்தை புள்ளி விவரங்களோட ஊர்ஜிதம் பண்ணியிருக்கு. ஆமாங்க, நம்ம கையில இருக்கிற போன்ல இன்னைக்கு ஒரு அத்தியாவசியமான ஆப்பா மாறிப்போன ChatGPT, இந்தியால ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியிருக்கு. இந்தியாவில் நடக்கும் "AI Impact Summit 2026" மாநாட்டிற்காக டெல்லி வந்திருக்கும் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், இந்தியாவின் வளர்ச்சி பத்தி சில ஆச்சரியமான விஷயங்களை சொல்லியிருக்காரு. பிப்ரவரி 2026 நிலவரப்படி, இந்தியாவிலிருந்து மட்டும் வாரத்திற்கு 100 மில்லியன் (10 கோடி) பயனர்கள் ChatGPT-ஐ பயன்படுத்துறாங்களாம். இது உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும்.

ஏன் இந்தியால இவ்வளவு வரவேற்பு?

சாம் ஆல்ட்மேன் அவரோட அறிக்கையில ஒரு முக்கியமான பாயிண்ட்டை சொல்லியிருக்காரு. "உலகிலேயே அதிகப்படியான மாணவர்கள் ChatGPT-ஐ பயன்படுத்துற நாடு இந்தியா தான்." இந்திய மாணவர்கள் தங்களோட கல்வி, கோடிங், மற்றும் புது விஷயங்களை கத்துக்கிறதுக்கு இந்த AI-ஐ ஒரு ஆசிரியரா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இதுமட்டும் இல்லாம, அறிவியல் ஆராய்ச்சிக்காக ஓபன் ஏஐ அறிமுகப்படுத்திய Prism அப்படிங்கிற டூலை பயன்படுத்துறதுல இந்தியா உலக அளவுல 4-வது இடத்துல இருக்கு. இந்த அசுர வளர்ச்சியை பார்த்த ஓபன் ஏஐ நிறுவனம், இந்திய சந்தையை கவனிக்காம விடக்கூடாதுன்னு முடிவு

பண்ணிட்டாங்க. அதனாலதான்:

டெல்லியில் புது அலுவலகம்: கடந்த 2025 ஆகஸ்ட் மாசமே டெல்லியில் தனது முதல் அலுவலகத்தை ஓபன் ஏஐ தொடங்கிடுச்சு. இப்போ அங்க இன்னும் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட்டு இருக்காங்க.
ChatGPT Go: இந்திய மக்களுக்காகவே விலை குறைவான அல்லது இலவசமான 'Go' வெர்ஷன் திட்டங்களை அறிமுகப்படுத்தி, AI-ஐ எல்லாருடைய கைக்கும் கொண்டு போயிருக்காங்க.

அரசுடன் கூட்டணி: இந்திய அரசுடன் இணைந்து சுகாதாரம், விவசாயம் மற்றும் பொதுச் சேவைகளில் AI-ஐ எப்படி பயன்படுத்தலாம்னு சாம் ஆல்ட்மேன் இப்போ பேச்சுவார்த்தை நடத்திட்டு வர்றாரு.

சாம் ஆல்ட்மேனின் 3 முக்கிய மந்திரங்கள்:

இந்தியாவோட எதிர்காலம் AI-ல தான் இருக்குன்னு சொல்ற சாம் ஆல்ட்மேன், மூணு

விஷயங்கள் ரொம்ப முக்கியம்னு சொல்றாரு:

● Access (அணுக்கம்): எல்லாருக்கும் AI கிடைக்கணும்.
● Adoption (ஏற்பு): ஸ்கூல், காலேஜ் மற்றும் வேலை இடங்கள்ல AI-ஐ பயன்படுத்த ஆரம்பிக்கணும்.
● Agency (திறன்): AI-ஐ வெறும் ஒரு கருவியா மட்டும் பார்க்காம, அதை வச்சு புதுசா எதையாவது உருவாக்கணும்.

சுருக்கமா சொல்லப்போனா, இந்தியா வெறும் AI யூசரா மட்டும் இல்லாம, உலகத்துக்கே AI-ல ஒரு லீடரா மாறப்போகுதுன்னு சாம் ஆல்ட்மேன் அடிச்சு சொல்லிருக்காரு. இனிமே நம்ம பசங்க ஹோம்வொர்க் பண்றதுல இருந்து, ஆபீஸ் வேலையை ஈஸியா முடிக்கிறது வரைக்கும் ChatGPT-ஐ வேற லெவல்ல யூஸ் பண்ணப்போறாங்கங்கிறது மட்டும் உறுதி. இந்த தகவல் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? நீங்க எதுக்காக ChatGPT-ஐ அதிகமா யூஸ் பண்றீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OpenAI, ChatGPT, AI

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. முதன்முறையாக ஒரு வால்நட்சத்திரம் தனது சுழற்சி திசையை மாற்றுவதை படம் பிடித்த ஹப்பிள் தொலைநோக்கி
  2. கட்டுரைகளில் ஏஐ உருவாக்கிய உரைகளுக்கு விக்கிப்பீடியா தடை; ஆனால் இரண்டு விலக்குகளை அளித்துள்ளது
  3. ஓப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா: 10x டெலிஃபோட்டோ கேமரா மற்றும் மேம்பட்ட ஸ்டெபிலைசேஷன் வசதி உறுதி
  4. ஒன்பிளஸ் நோர்டு CE 6, நோர்டு CE 6 லைட் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு; சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு
  5. விண்டோஸிற்கான சாம்சங் பிரவுசர் அறிமுகம்: ஏஜென்டிக் ஏஐ (Agentic AI) வசதிகள் மற்றும் சாதனங்களுக்கு இடையேயான இணைப்பு
  6. கூகுள் அப்டேட்: வேகமான பதில்களுடன் 'ஜெமினி லைவ்' மேம்பாடு; 'சர்ச் லைவ்' உலகளவில் விரிவுபடுத்தப்பட்டது
  7. ஐபோன் 18 ப்ரோ மாடல்களை விட தாமதமாகவே வெளியாகும் 'ஐபோன் ஃபோல்ட்': மார்க் குர்மன் தகவல்
  8. ஜெமினி, கிளாட் போன்ற பிற ஏஐ உதவியாளர்களையும் இனி 'சிறி' ஆதரிக்கும்: ஐஓஎஸ் 27-ல் அதிரடி மாற்றம்
  9. வாட்ஸ்அப் அதிரடி அறிவிப்பு: ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கு இரண்டு கணக்குகள், சாட் டிரான்ஸ்பர் டூல் மற்றும் பல வசதிகள் அறிமுகம்
  10. சாம்சங் கேலக்ஸி A57 5G, கேலக்ஸி A37 5G: இந்தியாவில் விலை மற்றும் சலுகைகள் அறிவிப்பு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.