ஆண்ட்ராய்ட் மெசேஜ் வெப் வெர்ஷன் அதாவது கணினி மூலமாக ஆண்ட்ராய்ட் மெசேஜை உபயோகிக்கும் வசதியை அறிவித்துள்ளது கூகுள். பல மாதங்களாக இதனை பற்றிய வதந்திகள் பரவிய நிலையில் இன்று கூகுளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் இந்த புதிய மெசேஜ் வசதி இவ்வார இறுதிக்குள் உலகில் உள்ள அனைத்து பயனானளர்களுக்கும் கிடைக்கும் என்று கூறியுள்ளது. இதை உபயோகிக்க ஆண்ட்ராய்ட் மெசேஜ் செயலியின் (App) லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்வது அவசியம். மெசேஜ், இமோஜி ஆகிய வகைகளில் கணினி மூலம் இதனை பயன்படுத்த முடியும்.
முன்னதாக கூகுள் நிறுவனம் ஆப்பிளின் ஐ மெசேஜ் ஆப்புக்கு போட்டியாக ஆண்ட்ராய்டின் செயலியான மெசேஜஸ் மூலம் எஸ்.எம்.எஸ். எம்.எம். எஸ் மற்றும் சாட் போன்ற சேவைகளை இதில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் ஆப் மெசேஜஸ் மற்றும் ஃபேஸ்புக் மெசெஞ்சர் போலவே ஆண்ட்ராய்ட் மெசேஜஸ் ஆப்பின் மூலம் மெசேஜ், படங்கள், மற்றும் ஸ்டிக்கர்கள் அடங்கிய ஒரு முமுமையான சாடிங்க் ஆப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு வெர்ஷன் 3.3.044 வெர்ஷனில் இயங்கும். இவ்வசதியை உபயோகப்படுத்த கூகுள் பிளே ஸ்டோரில் ஆண்ட்ராய்ட் மெசேஜ் இன் அப்டேட்டட் வர்சனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கணினியில் ஆண்ட்ராய்ட் மெசேஜஸ் வெப்சைட்டில் ஆண்ட்ராய்ட் மெசேஜ் ஃபார் வெப் என்ற லிங்க் மூலம் QR கோடை ஸ்கேன் செய்யது பயன்படுத்தலாம். QR கோடை ஸ்கேன் செய்ய ஸ்மார்ட்போனில் மெசேஜஸ் ஆப்பின் வலது புறத்தில் உள்ள மெனுவில் மெசேஜஸ் ஃபார் வெப் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இது வாட்ஸாப் வெப் போன்ற நடைமுறையே.
இச்செயலி தகவல் அனுப்ப மற்றும் பெறுவதற்கு மட்டும் அல்லாமல் டெஸ்க்டாப் அலர்ட்டையும் பெறமுடியும். இது குரோம், ஃபயர்ஃபாக்ஸ், மைரோசாஃப்ட் எட்ஜ், சஃபாரி ஆகிய இயங்கு தளங்களில் பயன்படுத்த முடியும். பரிமாறப்படும் தகவல் என்க்ரிப்ட் செய்யப்படடும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 14 நாட்கள் தொடர்ந்து இச்செயலியை உபயொக்கவில்லை என்றால் தானாகவே லாக் அவுட் ஆகிவிடும் வசதியும் இதில் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்