4G LTE-ஐ ஆதரிக்கும் Jio Phone-ன் பண்டிகை காலத்தில் விற்பனையில் ரூ. 699. இது மலிவு விலை ஸ்மார்ட் என ரிலையன்ஸ் ஜியோ செவ்வாயன்று ஒரு செய்தி அறிக்கை மூலம் அறிவித்தது. இந்த தொலைபேசி ஜூலை 2017-ல் ரூ. 1,500-யாக விற்பனைக்கு வந்தது, கடந்த மாதம் ஒரு பரிமாற்ற சலுகையைப் பெற்றிருந்தாலும், அதன் விலை ரூ. 501-யாக குறைந்திருந்தது. இருப்பினும், "Jio Phone தீபாவளி 2019" சலுகையின் கீழ் கிடைக்கும் புதிய தள்ளுபடி விலை "சிறப்பு நிபந்தனைகள்" அல்லது எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் இல்லாமல் பொருந்தும் என்று டெல்கோ இப்போது அறிவித்துள்ளது.
இந்தியாவில் Jio Phone விலை
Jio Phone தீபாவளி 2019 சலுகையின் படி, இந்தியாவில் Jio Phone-ன் விலை ரூ. 699. Jio Phone-ஐ ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.700 கூடுதல் டேட்டா தரவும், ரிலையன்ஸ் ஜியோ உறுதியளித்துள்ளது. ரூ. 99 செலுத்தி கூடுதல் டேட்டாவை பெற, வாடிக்கையாளர்கள் முதல் ஏழு ரீசார்ஜ்களை செய்ய வேண்டும் என்று டெல்கோ கூறியுள்ளது.
அக்டோபர் 4 முதல் புதிய சலுகை பொருந்தும் என்று ரிலையன்ஸ் ஜியோ, 'கேஜெட்ஸ் 360'-க்கு உறுதிப்படுத்தியுள்ளது.
Jio Phone விவரக்குறிப்புகள்
KaiOS-based Jio Phone 2.4-inch டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 1.2GHz dual-core processor மூலம் இயக்கப்படுகிறது. அதோடு 512MB ரேம் உள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவுடன் (128 ஜிபி வரை) 4 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த தொலைபேசியில் வைஃபை இணைப்பு மற்றும் 2,000mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.
Google Assistant ஆதரவுடன், ஜியோ தொலைபேசியில் 22 இந்திய மொழிகள் உள்ளன. proprietary cable-ஐப் பயன்படுத்தி HDTV-க்கு தொலைபேசி மூலம் விளையாடும் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் ஆப்ஷனுடன் வருகிறது. மேலும், பேஸ்புக், கூகுள் மேப்ஸ், வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் போன்ற பயன்பாடுகளும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்