பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பயனர்களுக்கு கூடுதல் டேட்டாவை வழங்க அதன் முக்கிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை திருத்தியுள்ளது. டெல்கோ ரூ. 186 மற்றும் ரூ. 187 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்க திட்டமிட்டுள்ளது. இதேபோல் ரூ. 153-க்கு பல்வேறு வாயிஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை வழங்க 153 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கியுள்ளது. பிஎஸ்என்எல் தனது ரூ. 106 மற்றும் ரூ. 107 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை திருத்தி அமைத்துள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற தனியார் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையாக போட்டியிடவும், புதிய சந்தாதாரர்களை ஈர்க்கவும் உதவும்.
பி.எஸ்.என்.எல் ஹரியானா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, ரூ. 186 மற்றும் ரூ.187 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு, இதற்கு முன்னர் வழங்கிய 2 ஜிபி தினசரி டேட்டா சலுகைகள், இப்போது 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவாக கிடைக்கின்றன.
பயனர்கள் மொபைல் டேட்டாவை 40Kbps வேகத்தில் ரூ. 186 மற்றும் ரூ. 187-க்கு பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதலாக கிடைக்கிறது. இலவசமாக personalised ring back tone (PRBT) சேர்க்கும் வசதியும் உள்ளது.
டெலிகாம் டாக் குறிப்பிட்டுள்ளபடி, பி.எஸ்.என்.எல் தளம் வேறு சில திருத்தப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளது. இதில் ரூ. 153 திட்டத்தில் 1.5 ஜிபி தினசரி டேட்டா சலுகைகள் 250 நிமிட வாயிஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள் வீதம் 28 நாட்களுக்கு கிடைக்கிறது. ரூ. 118 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமும் 0.5 ஜிபி தினசரி டேட்டா, 250 நிமிட வாயிஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மெசேஜ்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ஹரியானாவைத் தவிர மற்ற வட்டங்களில் இன்னும் கிடைக்கவில்லை. மேலும், சமீபத்திய திருத்தம், நிரந்தரமாகவா அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமா என்பது தெளிவாக இல்லை.
சமீபத்திய புதுப்பிப்பு குறித்த தெளிவுக்காக பிஎஸ்என் எல்லை அணுகியுள்ளோம். அடுத்த அறிவுப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிப்போம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்