அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது Xiaomi Watch!

அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது Xiaomi Watch!

Photo Credit: MyDrivers

Xiaomi Watch-ன் நேரடி படம் ஆன்லைனில் வந்துள்ளது. இது சதுர வடிவமைப்பைக் காட்டுகிறது

ஹைலைட்ஸ்
  • stainless steel frame உடன் வருவதை Xiaomi Watch கிண்டல் செய்கிறது
  • வெய்போவில் புதிய டீஸர்களை வெளியிட்டுள்ளது ஜியோமி
  • Xiaomi Watch-ன் நேரடி படன் அதன் கருப்பு பட்டையை காட்டுகிறது
விளம்பரம்

Mi Watch என அதிகாரப்பூர்வமாக வரக்கூடிய Xiaomi Watch, வட்டமான விளிம்புகளைக் (rounded edges) கொண்ட ஒரு சபையர் கண்ணாடி பாதுகாப்பு (sapphire glass protection) இருப்பதை கிண்டல் செய்துள்ளது. சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச், ஆப்பிள் வாட்சைப் போன்ற digital crown உடன் வருவதோடு, stainless steel வடிவமைப்பைக் கொண்டுள்ளது. புதிய டீஸர்களுடன், வலையதளத்தில் வெளிவந்த ஒரு நேரடி படத்தில் ஜியோமி வாட்ச் காணப்பட்டது. நேரடி படம் ஆப்பிள் வாட்சுடன் அதன் வடிவமைப்பு ஒற்றுமையைக் காட்டுகிறது. பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நிறுவனம் நவம்பர் 5 செவ்வாய்க்கிழமை ஒரு நிகழ்வில் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்த உள்ளது.

வெய்போவில் வெளியிடப்பட்ட புதிய டீஸரின் கூற்றுப்படி, stainless steel frame உடன் Xiaomi Watch aka Mi Watch வருவதோடு, digital crown-ஐ உள்ளடக்கியது. இது ஆப்பிள் வாட்சைப் போன்றது.

ஒரு தனி டீஸரில், Mi Watch சபையர் கண்ணாடி பாதுகாப்புடன் (sapphire glass protection) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்வாட்சும் கீறல் எதிர்ப்பைக் கொண்டு கிண்டல் செய்யப்படுகிறது.

xiaomi watch teasers weibo Xiaomi Watch  Mi Watch  Xiaomi

Photo Credit: Weibo


பயனர்கள் அழைப்புகளைச் செய்வதற்கும், அவர்களின் ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், புதிய ஸ்மார்ட்வாட்ச் மேப்பிங் வழிசெலுத்தலை (mapping navigation) ஆதரிக்கும் என்பதையும் ஜியோமி கூடுதலாக உறுதிப்படுத்தியுள்ளது.

டீஸர்களைத் தவிர, My Drivers-ல் வெளியிடப்பட்டபடி, ஜியோமி வாட்சின் நேரடி படம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. ஸ்மார்ட்வாட்சில் dynamic wallpaper, rounded-edge மற்றும் square design இருப்பதாகத் தெரிகிறது. இதில் ஒரு கருப்பு பட்டையும் உள்ளது. சமீபத்திய காலங்களில் பல மணிக்கட்டு பட்டையை நாங்கள் பார்த்தோம்.

Xiaomi Watch நவம்பர் 5 ஆம் தேதி சீனாவில் தொடங்க உள்ளது. இது, Watch OS-க்கான MIUI-யால் இயங்குகிறது. மேலும், Qualcomm Snapdragon Wear 3100 SoC-ஐ உள்ளடக்கியது. smartwatch-ன் இணைப்பு விருப்பங்களில் Wi-Fi, Bluetooth, GPS மற்றும் NFC ஆதரவு ஆகியவை அடங்கும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi Watch, Mi Watch, Xiaomi
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »