ஷாவ்மியின் புதிய சாதனமான எம்ஐ ஃபன்னி வாட்ச் 4 சீனாவில் அறிமுகம். இந்த வாட்சில் உள்ள பேட்டரி எட்டு நாட்கள் நீடிக்கும். இதில் இரண்டு கேமராக்கள் உள்ளன.
Xiaomi எம்ஐ ஃபன்னி வாட்ச் 4-ன் விலை சிஎன்ஒய் 899 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9,600) ஆகும். இந்த வாட்ச் ப்ளூ மற்றும் பிங்க் கலர் ஆப்ஷன்களில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. இந்த வாட்ச் ஜே.டி.காமில் மற்றும் அதிகாரப்பூர்வ எம்ஐ.காம்-ல் உள்ளது.
இந்த வாட்ச் 1.78 அங்குல AMOLED டிஸ்பிளே உள்ளது.
2.5டி வளைந்த கண்ணாடித் திரையை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உள்ளது.
வாட்சில் இரண்டு 5 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன.
ஒன்று 5 மெகாபிக்சல் கேமரா. இது வீடியோ அழைப்புகளுக்காக வாட்சின் முகத்தில் உள்ளது.
இரண்டாவது 5 மெகாபிக்சல் கேமரா பக்கவாட்டில் உள்ளது. இந்த கேமரா AI அங்கீகாரத்தைக் கொண்டது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சுற்றி இருப்பதைக் காணலாம்.
இந்த வாட்ச் என்எப்சி, வைஃபை, 4 ஜி, ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோனுடன் வருகிறது.
20 மீட்டர் வரை நீரை எதிர்க்கும் திறன் உள்ளது.
வாட்சில் 920 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது எட்டு நாட்கள் வரை நீடிக்கும்.
வாட்சின் எடை 296 கிராம் ஆகும்.
இந்த வாட்சில், நாடு முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களின் தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது.
இதில் உள்ள voice assistant, குழந்தைகளுக்கு அலாரம் வைப்பதற்கும், இசை வாசிப்பதற்கும், ஆங்கிலம் கற்பதற்கும் உதவுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்