'வயர்லெஸ் இயர்பாட்ஸ்' தயாரிப்புடன் இந்தியாவில் களமிறங்கும் 'ஸ்கல்கேண்டி'!

'வயர்லெஸ் இயர்பாட்ஸ்' தயாரிப்புடன் இந்தியாவில் களமிறங்கும் 'ஸ்கல்கேண்டி'!

ஸ்கல்கேண்டி தயாரிப்புகள் தங்களது நிறங்களுக்காக மிகவும் பிரபலமானவை.

ஹைலைட்ஸ்
  • ரூ.9,999க்கு விற்பனை செய்யப்படும் ஸ்கல்கேன்டியின் புதிய தயாரிப்பு!
  • ஸ்கல்கேன்டி நிறுவனத்தின் சார்பில் வெளியாகும் முதல் இயர்பாட்ஸ்சாகும்!
  • 12 மணிநேரம் வரை சார்ஜை இந்த தயாரிப்பு கொண்டிருக்கும் இருக்கும் என தகவல்!
விளம்பரம்

அமெரிக்காவில் கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமான ஸ்கல்கேண்டி(Skullcandy) ஆடியோ நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் பிரத்யேக ஸ்டைல் மற்றும் நிறங்களுக்காக அதன் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. 'தி புஷ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த வயர்லெஸ் இயர்போன்ஸ் தனக்கென பிரத்யேக சார்ஜிங் கேசுடன் ரூ.9,999க்கு இந்தியாவில் வெளியாகிறது.

மேலும் இந்தத் தயாரிப்புகள் இன்று முதல் ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்யப்படுகறிது. ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'தி புஷ்', இந்த நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் இயர்போன்களாகும்.

ஆப்பிள் ஏர்பாட்ஸைத் தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் இதுபோன்ற வயர்லெஸ் இயர்போன்ஸ் மற்றும் ஹெட்போன்களை தயாரித்து வரும் நிலையில் ஸ்கல்கேண்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த தயாரிப்பின் விலையை மிகவும் சரியாக நிர்ணயத்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ்களைப் பொறுத்தவரை, நீர் புக வழியில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.

ப்ளூடுத் வெர்ஷன் 4.2 கொண்ட இந்த இயர்பாட்கள் 12 மணி நேரம் வரை இயங்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்பாட்கள் உங்களது காதுகளில் மிகவும் கச்சிதமாக பொருந்த ஸ்கல்கேண்டி நிறுவனம் தயாரிப்பில் ஒரு ஜெல் வழங்கபட்டுள்ளது. ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் தயாரிப்பில் இதற்கு முன்னர் ரிஃப் வயர்லெஸ் ஹெட்போன்கள் ரூ.5,999க்கு இந்தியாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Skullcandy, Skullcandy Push, truly wireless earphones, Earphones
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »