ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்களுடன் இந்தியாவில் Mi ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போனையும் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். மைக்ரோ-ஆர்க் காலர் வடிவமைப்பு கொண்ட இந்த ஹெட்போன்கள், ப்ளூடூத் v5.0 வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி அளவை கொண்டுள்ளது. புது டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் ஸ்மார்ட்போன்கள், ஹெட்போன் மட்டுமின்றி Mi ரீ-சார்ஜபில் LED விலக்கையும் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
நேற்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹெட்போன், ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi ஆகிய தளங்களில் விற்பனையாகவுள்ளது. இந்த ஹெட்போனிற்கான விற்பனை ஜூலை 23-ல் துவங்கும் என அறிவித்துள்ளது சியோமி நிறுவனம். இந்த Mi ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் 1,599 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
முன்பு கூறியதுபோலவே, இந்த ஹெட்போன் மைக்ரோ-ஆர்க் காலர் வடிவமைப்பு கொண்டுள்ளது. இந்த ஹெட்போன் வெறும் 13.6 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹெட்போன் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது. அதனால், தொலைப்பேசி அழைப்புகளை பேசிக்கொள்ளலாம். முன்பு கூறியதுபோல இந்த ஹெட்போன், ப்ளூடூத் v5.0 வசதி கொண்டு அறிமுகமாகியுள்ளது.
120mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஹெட்போன், ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி திறனை கொண்டுள்ளது.
இந்த ஹெட்போனுடன் அறிமுகமான Mi ரீ-சார்ஜபில் LED விலக்கு, 1,499 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. ஆனால், ஜூலை 18 அன்று நடைபெறவுள்ள இதன் விற்பனையில், 1,299 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த விலக்கு 5 நாட்கள் நீடிக்கும் பேட்டரி அளவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்