எம்ஐயின் டிவி மற்றும் ஸ்போர்ட்ஸ் இயர்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகம்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 28 பிப்ரவரி 2019 21:50 IST
ஹைலைட்ஸ்
  • வரும் மார்ச் 7 எம்ஐ தொலைக்காட்சி டிவி 4 A ப்ரோ 32!
  • எம்ஐ ஸ்போர்ட்ஸ் இயர்போன்ஸ் பேசிக் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை
  • இந்த இயர்போன்ஸ் ரூ.1,499க்கு விற்பனை

எம்ஐ டிவி 4A ப்ரோ 32 தொலைக்காட்சி ரூ.12,999

சியோமி நிறுவனம் சார்பில் இன்று ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த போன்கள் மட்டுமில்லாமல் எம்ஐ டிவி 4A ப்ரோ 32 மற்றும் எம்ஐ ஸ்போர்ட்ஸ் புளூடூத் இயர்போன்ஸ் பேசிக் ஆகிய தயாரிப்புக்கள் இன்று அறிமுகமாகின. இன்று முதல் முன்பதிவு தொடங்குகின்ற நிலையில் விற்பனைக்கு வெளியாகும் நாள் இன்னும் அறியப்படவில்லை.

Advertisement

எம்ஐ டிவி 4A ப்ரோ 32 விலை மற்றும் அமைப்புகள்:

இந்தியாவல் ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படும் எம்ஐ டிவி 4A ப்ரோ 32 வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஆகிய தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

32 இஞ்ச் தொலைக்காட்சியான இந்த தயாரிப்பு 60Hz மற்றும் ஹெச்டி திரையை கொண்டுள்ளது. 178 டிகிரி வியூவிங் ஆங்கில், 20W ஸ்பீக்கர்கள் மற்றும் ஆண்டுராய்டு டிவி ஆகிய வசதிகளுடன் வெளியாகுகிறது. 

Advertisement

மேலும் 64-பிட் அம்லாஜிக் கோர்டெக்ஸ்- A53 பிராசஸ்சரை கொண்டுள்ள இந்த தயாரிப்பு 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு வசதிகளை கொண்டுள்ளது. குரோம்காஸ்ட் பில்டின், கூகுள் பிளே ஆக்சஸ், யூஎஸ்பி போர்ட், புளூடுத் பவர் கொண்ட எம்ஐ ரிமோர்ட், எர்த்னேட் போன்ற அமைப்புகள் வெளியாகியுள்ளது.
 

 

 

 

 

Advertisement

எம்ஐ ஸ்போர்ட்ஸ் புளூடூத் இயர்போன்ஸ் பேசிக்:

எம்ஐ ஸ்போர்ட்ஸ் புளூடூத் இயர்போன்ஸ் பேசிக் இந்தியாவில் ரூ.1,499க்கு விற்பனை செய்யபடுகிறது. இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சியோமி நிறுவனம் சார்பாக  இன்னும் விற்பனைக்கு வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. 

Advertisement

மேலும் எம்ஐ.காம் மட்டுமின்றி மற்ற தளங்களில் விற்பனை செய்யப்படுமா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த இயர்போன்ஸ் IPX4 சான்றிதழ் பெற்றுள்ளதால் வியர்வை மற்றும் தண்ணிர் துளிகளில் இருந்து இயர்போன்களை பாதுகாக்கும். இந்த இயர்போன்சில் கூகுள் உதவியாளரும், 9 மணிநேர பேட்டரி பவரும் இடம்பெற்றுள்ளது. 

இதில் சிறப்பம்சமாக 5 சைஸ்களில் சிலிக்கான் இயர் பட்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.