Photo Credit: Twitter/ Huawei India
ஹூவாய் வாட்ச் ஜிடி அறிமுகமாகி ஐந்து மாதங்களே ஆகியுள்ள நிலையில், சீன நிறுவனமான ஹூவாய் தனது தயாரிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. அமேசானில் இந்த ஸ்மார்ட் வாட்ச் வெளியாக உள்ள நிலையில், 50 மீட்டர் வரை தண்ணீர் புகாமல் பாத்துக் கொள்ளும் சிறப்பைப் பெற்றுள்ளது.
மேலும் அமேசான் சார்பில் வெளியான டிரில் ஹூவாய் வாட்ச் வரும் மார்ச் 12 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் தெரிவிக்கப்படுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் வகை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேட் 20 வகையுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூவாய் வாட்ச் ஜிடி அமைப்புகள்:
ஹூவாய் வாட்ச் ஜிடி வட்டவடிவில் டயல், 10.6mm அடர்த்தி மற்றும் 1.39 இஞ்ச் ஓலெட் டச் திரையை கொண்டுள்ளது. இதில் அமைந்திருக்கும் ட்ரூசீன் 3.0 இதயத் துடிப்பை கண்காணிக்க உதவுகிறது. மேலும் இதில் அமைந்திருக்கும் ட்ரூஸ்லீப் 2.0 ஒருவரின் துக்கத்தின் அளவு மற்றும் நல்ல துக்கமின்னைக்கான காரணத்தையும் கூறுகிறது.
இதுமட்டுமின்றி மெசஜூக்கள், போன்கால்கள் மற்றும் அலாரம் போன்றவைகள் இதில் நம்மால் பார்க்க முடிகிறது. இதில் 16எம்பி ரேம் மற்றும் 128எம்பி ரோம் இடம்பெற்றுள்ளது. ப்ளூடுத் 4.2 கனெக்டிவிட்டி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச் இரண்டு வாரம் வரை பேட்டரி பவரை கொண்டுள்ளது.
ஸ்டாராப் இல்லாமல் 46 கிராம் கொண்ட இந்த ஹூவாய் வாட்ச் ஜூடி பிளாக் ஸ்டேன்லெஸ் ஸ்டீல் மற்றும் ஸ்டேன்லெஸ் ஸ்டீல் டையல் மற்றும் கிராப்பைட் பிளாக், சாடில் பிரவுன் லெதர், கிலேசியர் கிரே மற்றும் ஃபுளோரசென் கிரீன் ஸ்டிராப் நிறங்களில் வெளியாகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்