14-நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது Huawei Watch GT 2! 

14-நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது Huawei Watch GT 2! 
ஹைலைட்ஸ்
  • Huawei Watch GT 2-வின் விலை ரூ. 14,990 ஆகும்
  • இந்த ஸ்மார்ட்வாட்ச் Kirin A1 SoC-யால் இயக்கப்படுகிறது
  • Huawei Watch GT 2, 42mm & 46mm dial size-களில் கிடைக்கிறது
விளம்பரம்

Huawei Watch GT 2 இந்தியாவில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனம் அறிமுகப்படுத்திய Huawei Watch GT-யின் தொடர்ச்சி ஆகும். செப்டம்பர் மாதம் Watch GT 2-ஐ சர்வதேச அளவில் அறிமுகப்படுத்திய ஹவாய், இந்தியாவில் தயாரிப்பு அறிமுகத்தை கேலி செய்து கொண்டிருந்தது. புதிய ஸ்மார்ட்வாட்சின் சிறப்பம்சம் இரண்டு வார பேட்டரி ஆயுள் மற்றும் stress monitoring, heart-rate tracking மற்றும் மற்றவர்களிடையே sleep tracking போன்ற அம்சங்களுடன் உள்ளது. புதிய Watch GT 2 இரண்டு டயலில் வருவதோடு AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.


இந்தியாவில் Huawei Watch GT 2-வின் விலை, சலுகைகள்:

Huawei Watch GT 2, 42mm மற்றும் 46mm dial அளவுகளில் கிடைக்கிறது மற்றும் தேர்வு செய்ய பலவிதமான கேஸ் வண்ணங்கள் மற்றும் பட்டைகள் உள்ளன. Huawei Watch GT 2, 46mm Sport (Black) விலை ரூ. 15,990-யாகவும், 46mm Leather Sport விலை ரூ. 17,990-யாகவும், மற்றும் 46mm Titanium Grey (Metal) விலை ரூ. 21.990-யாகவும் விலையிடப்பட்டுள்ளது. 42mm Black வேரியண்டின் விலை ரூ. 14,990 ஆகும்.

ஹவாய் தற்போது 46mm Watch GT 2 மாடல்களில் சில சலுகைகளை கொண்டுள்ளது, வாங்குவோர் டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18 வரை இந்த கடிகாரத்தை முன்பதிவு செய்தால், அவர்களுக்கு ரூ. 6,999 மதிப்புள்ள Huawei Freelace earphones-ஐ இலவசமாக பெறலாம். 46mm வேரியண்ட்கள் டிசம்பர் 19 நள்ளிரவில் விற்பனைக்கு வரும். டிசம்பர் 19 முதல் டிசம்பர் 31 வரை வாங்கும் ஆரம்பகால வாங்குபவர்கள் ரூ. 2,999 மதிப்புள்ள Huawei Minispeaker-ஐ இலவசமாக பெறுவார்கள். வாங்குபவர்கள் இந்த சாதனத்தில் no-cost EMI-களையும் பெறலாம்.

ஹவாய் 42mm வேரியண்ட்டின் விலையை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளது. மேலும், கிடைக்கும் மற்றும் சலுகைகள் பிற்காலத்தில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.


Huawei Watch GT 2-வின் சிறப்பம்சங்கள்:

Huawei Watch GT 2 விவரங்களை நாங்கள் ஏற்கனவே அறிந்தோம். சர்வதேச அறிமுகத்திற்கு நன்றி. 42mm Huawei Watch GT 2, 1.2-inch AMOLED டிஸ்ப்ளே 390x 390 பிக்சல்கள் தெளிவுத்திறனுடன் உள்ளது, அதே நேரத்தில் பெரிய 46mm வேரியண்ட்டில் 454 x 454 பிக்சல்கள் தெளிவுதிறன் கொண்ட 1.39-inch பெரிய AMOLED டிஸ்ப்ளே உள்ளது. Huawei Watch GT 2-வின் இரண்டு வகைகளும் ஜிபிஎஸ் மற்றும் புளூடூத் 5.1-க்கான ஆதரவைக் கொண்டுள்ளன. இந்த சாதனங்களில் accelerometer, gyroscope, geomagnetic சென்சார், optical heart-rate சென்சார், ambient light சென்சார், air pressure சென்சார் மற்றும் capacitive சென்சார் ஆகியவை உள்ளன. இந்த Huawei Watch GT 2 வகைகளும் 5ATM வரை நீர் எதிர்ப்பும் உள்ளது.

Huawei Watch GT 2, Kirin A1 சோசி மூலம் இயக்கப்படுகிறது, இது அணியக்கூடிய சாதனங்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Huawei GT 2-வின் 46mm வேரியண்ட் 455mAh பேட்டரியை பேக் செய்கிறது. சிறிய 42mm வேரியண்ட்டில் 215mAh பேட்டரி உள்ளது. 46mm வேரியண்ட்டுக்கு 14 நாள் பேட்டரி ஆயுள் இருப்பதாக ஹவாய் கூறுகிறது, 42mm வேரியண்ட் 7 நாட்கள் பேட்டரி ஆயுள் கொண்டது. கடிகாரத்துடன் வழங்கப்பட்ட magnetic charging thimble வழியாக சார்ஜிங் செய்யப்படுகிறது. Watch GT 2-க்கு ஒரு ஸ்பீக்கர் இருப்பதால், பயனர்கள் Watch GT 2-விலிருந்து ஒரு அழைப்பிற்கு பதிலளிக்கலாம்.

Huawei Watch GT 2 15 விளையாட்டு கண்காணிப்பு செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, இதில் ஓட்டம் (running), நடைபயிற்சி (walking), ஏறுதல் (climbing), ஹைக்கிங் டிரெயில் ஓடுதல் (hiking trail running), சைக்கிள் ஓட்டுதல் (cycling), திறந்த நீர் (open water), டிரையத்லான் (triathlon) மற்றும் ஏழு உட்புற விளையாட்டுகளான நடைபயிற்சி (walking), ஓட்டம் (running), சைக்கிள் ஓட்டுதல் (cycling), நீச்சல் குளம் (swimming pool), இலவச பயிற்சி (free training), நீள்வட்ட இயந்திரம் (elliptical machine) மற்றும் ரோயிங் இயந்திரம் (rowing machine) ஆகும். இந்த வாட்ச் இதய துடிப்பு கண்காணிப்பு (heart-rate tracking) மற்றும் தூக்க கண்காணிப்பு (sleep tracking) திறன் கொண்டது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design and comfort
  • Tracking accuracy
  • Software and ecosystem
  • Battery life
  • Good
  • Good battery life
  • Premium looks
  • Accurate tracking
  • Bad
  • No stress tracking on iOS
  • UI performance issues
Strap Colour Titanium Grey Metal Strap, Orange Fluoroelastomer Strap, Brown Leather Strap, Black Fluoroelastomer Strap
Display Size 46mm
Dial Shape Round
Display Type AMOLED
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huawei, Huawei Watch GT 2, Huawei Watch GT 2 46mm, Huawei Watch GT 2 42mm
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »