Gionee Smart 'Life' Watch இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், இளைஞர்களை மையப்படுத்தி அறிமுகமாகியுள்ளது. ஜியோனியின் இந்த ஸ்மார்ட் 'லைஃப்' வாட்ச் 24 மணி நேரம் இதய துடிப்பை கண்கானிக்கும் ஹார்ட் ரேட் சென்சாருடன் கலோரி மீட்டர், உடற்பயிற்சி, உடல்நலம் மற்றும் பல விளையாட்டு செயல்பாடு என அனைத்தையும் கண்கானிக்கும் திறனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தொலைபேசி அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜியோனியின் இந்த ஸ்மார்ட்வாட்ச் கூகுள் ஃபிட் (Google Fit) மற்றும் ஸ்டார்வா (Strava) என்ற இரண்டு செயலிகள் மூலம் இயங்கும்.
டச்ஸ்கிரீன் வசதியுடன் 1.3-இன்ச் IPS கலர் திரையை கொண்டுள்ள இந்த ஜியோனி ஸ்மார்ட் 'லைஃப்' வாட்ச் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை கொண்டுள்ளது. 316L தரம் கொண்ட ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் 5 ATM வரையிலான தண்ணீர் அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டுள்ளது. நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் மற்றும் உட்புற அல்லது வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவது போன்ற அனைத்து நேரங்களிலும் உங்கள் இதய துடிப்பை கண்கானிக்கும் திறன் கொண்ட ஹார்ட் ரேட் சென்சார் இந்த ஸ்மார்ட்வாட்சில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் தங்கள் நிகழ்நேர உடற்தகுதியை கண்கானித்துக்கொள்வதற்கென ஜியோனி 'G Buddy' என்ற செயலியை கொண்டுள்ளது. இந்த செயலியின் மூலம் தங்களுடைய தரவுகளை கூகுள் ஃபிட் (Google Fit) மற்றும் ஸ்டார்வா (Strava) போன்ற மற்ற தரவுகளுடன் ஒருங்கிணைத்துக் கொள்ளலாம்.
மத்த ஸ்மார்ட்வாட்ச்கள் போன்றே, ஜியோனியின் இந்த ஸ்மார்ட்வாட்சும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்வாட்ச் உடல்நிலை அலார்ட், மெமரி ஃபுல் அலார்ட், அலாரம், பெண்களின் ஆரோக்கியம் குறித்த வசதிகள், பவர் சேவிங் மோட், மியூசிக் கன்ட்ரோல் மற்றும் ஃப்ளாஷ்லைட் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
210mAh அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்சின் பேட்டரி, 15 நாட்கள் நீடிக்கும் பேட்டரி திறனை உறுதி செய்கிறது.
இந்த ஜியோனி ஸ்மார்ட் 'லைஃப்' வாட்ச் பிளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 14ஆம் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கருப்பு என்ற ஒரே வண்ணத்தில் அறிமுகமாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்