ஃபிட்பிட் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச் வரிசையில் வெர்சா என்ற இரண்டாவது மாடலை வெளியிட்டுள்ளது. வாட்ச்சிலேயே பணம் செலுத்தும் வசதி கொண்டதாக இருக்கும் வெர்சா உருவாக, சமீபத்தில் ஃபிட்பிட் நிறுவனம் வாங்கிய பெப்பல் மற்றும் காயின் ஆகிய நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.
இதற்கு முந்தைய மாடலான ஐயோனிக்கோடு ஒப்பிட்டு பார்க்கையில், இரண்டே மாற்றங்கள் தான் உள்ளது. வெர்சாவில் ஜி.பி.எஸ் வசதி மற்றும் எ.எஃப்.சி சிப் வசதி இல்லை. ஆனால், இந்தியாவில் வெளியாக இருக்கும் வெர்சா மாடலில், 'ஃபிட்பிட் பே' மூலம் பணம் செலுத்த முடியும். ஆனால், இன்னும் எந்த வங்கியுடனும், ஒப்பந்தம் செய்யப்படாததால், தற்போது பணம் செலுத்த முடியாது.
மற்ற அம்சங்கள் அனைத்தும், ஐயோனிக் மாடல் போலவே இருக்கிறது. 50 மீட்டர் ஆழம் வரை வட்டர் ப்ரூஃப் உள்ளது. கலர் ஸ்கிரீன் மற்றும் இதயத் துடிப்பை பதிவு செய்துக் கொண்டே இருக்கும், இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் பேட்டரி 4 முதல் ஒரு வாரம் வரை தாங்கக் கூடும்.
விலையை பொருத்தவரையில் பெரிய வித்தியாசம் இல்லை. 20 ஆயிரம் ரூபாய்க்கு வெர்சா விற்பனைக்கு வருகிறது. ஆனால், முந்தைய மாடலான ஐயோனிக் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தனது போட்டியாளர்களான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 மற்றும் சாம்சங் கீர் ஸ்போர்ட் ஆகிய ஸ்மார்ட்வாட்ச்கள் காட்டிலும், வெர்சாவின் விலை குறைவே.
வெர்சாவின் வடிவமைப்பைப் பொருத்தவர ஆப்பிள் வாட்ச்சின் வடிவமைப்பை ஒத்து இருக்கிறது. சதுர வடிவிலான அதன் டிஸ்பிளே 1.34இன்ச் எல்.சி.டி திரையும் 317 பிக்சலும் கொண்டது. ஆப்பிள் மற்றும் ஃபிட்பிட் ஐயோனிக்கை விட இது அளவில் சிறியதாகும்.
வெர்சாவின் ஸ்ட்ராப் எளிமையான டிசைன் கொண்டதாக இருக்கிறது. 22 மில்லி மீட்டர் ஸ்ட்ராப்புகள் வரை பயன்படுத்தலாம். ஸ்ட்ராப் மற்றும் வாட்ச்சின் மற்ற பாகங்களின் தரத்தை பொருத்தவரை, ஃபிட்பிட்டின் கை ஓங்கி நிற்கிறது.
கூடுதலாக சிலிக்கான் ஸ்ட்ராப் மற்றும் மெஷ் ஸ்ட்ராப் வேண்டும் என்றால் 2,000 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.
ஐயோனிக் மற்றும் ஆப்பிள் வாட்ச்சை காட்டிலும் வெர்சாவின் எடைக் குறைவாகவே உள்ளது. 38 கிராமோடு மிக லைட்டாகவே உள்ளது வெர்சா.
வெர்சாவில் மூன்று பட்டன்கள் இருக்கின்றன. வலது புறம் இரண்டும் , இடது புறம் ஒரு பட்டனும் உள்ளது. வலதில் இருக்கும் இரண்டு பட்டன்கள் முதல் இரண்டு ஆப்களுக்கு ஷார்ட்கட்டாக இருக்கிறது.
ஸ்கிரீனில், மேலே ஸ்வைப் செய்தால், அவசியமான தகவல்களான, பேட்டரி, கடைசி 3 உடல்பயிற்சி குறித்த டேட்டா ஆகியவற்றை டிராக் செய்த தகவல்களை பார்க்கலாம். கீழே ஸ்வைப் செய்வதன் மூலம், நோட்டிஃபிக்கேஷன்களை பார்க்க முடியும். இடது புறம் ஸ்வைப் செய்தால், ஆப்களை பிரவுஸ் செய்ய முடியும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்ஸில் இணைந்து இயங்க 'ஃபிட்பிட் ஆப்' அவசியம் தேவை. ஃபிட்னஸ் டிராக்கருக்காக உருவாக்கபட்ட ஃபிட்பிட் ஆப், ஸ்மார்ட் வாட்ச்க்கு பயன்படுவதால், அதிக டிசைன் அவ்வளவு எளிமையாக இல்லை.
வாட்ஸாப், ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், மெசஞ்செர் என ஆண்ட்ராய்டோடு இணைத்து பயன்படுத்தலாம். அவற்றில் ரிப்ளைகளை எளிதாக தரும் வகையில் எமோஜிக்கலும், குறுந்தகவல் டெம்பிளேட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ப்ளூடூத் ஹெட்ஃபோன்கள் மூலம், ஃபிட்பிட் வெர்சாவில் இருந்து பாடல்கள் பிளே செய்ய முடியும். ஆனால், முன்னதாக 2.5ஜி ஸ்டோரேஜில், பாடல்களை பதிவேற்ற வேண்டும் என்பது, கூடுதல் வேலையாக இருக்கிறது.
ஃபிட்பிட்டில் ஆட்டோ டிராக்கர் வசதி உள்ளது. அது, நாம் உடல்பயிற்சி செய்வதை தானாகவே டிராக் செய்யத் தொடங்கிவிடும். டிராக்கரை ஆன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சோதித்து பார்த்ததில் உடல்பயிற்சி, சைக்கிளிங், நடைபயிற்சி ரன்னிங், நீச்சல், வெயிட் லிஃப்டிங், கோல்ஃப், கிக் பாக்ஸிங்,யோகா என அனைத்து வகை அசைவுகளையும் ஆட்டோ டிராக்கர் சிறப்பாகவே டிராக் செய்கிறது.
50 மீட்டர் ஆழம் வரை வாட்டர் ப்ரூஃப் இருப்பதால், கவலை இன்றி நீச்சல் பயிற்சிக்கு பயன்படுத்தலாம். ஆனால், நீரில் இருந்து வெளியே வந்த பிறகு, துடைப்பது அவசியம்.
ஃபிட்பிட் டிராக் செய்யும் டேட்டாக்களில், 10% வரையிலான தவறு இருக்கிறது. 20 ஆயிரம் மதிப்பிலான, ஸ்மார்ட்வாட்ச்சுக்கு இது, மிக அதிகம்.
வெர்சாவில் இதயத் துடிப்பை டிராக் செய்யும் வசதியும் உள்ளது. தொடர்ந்து டிராக் செய்யும் தகவலை வைத்து, உங்கள் இதயம் எப்படி செயல்படுகிறது என்ற கூறுகிறது.
ஒட்டுமொத்தமாக, வடிவைமைப்பில் நல்ல முன்னேற்றம் பெற்றிருக்கிறது, வெர்சா. மேலும், ஐயோனிக் மாடலின் அனைத்து சிறப்பம்சங்களும் வெர்சாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 4 முதல் ஒருவாரம் வரை தாங்கும் பேட்டரி, ஸ்மாட்ட்ஃபோனுடன் இணைந்த ஜி.பி.எஸ், சிறப்பான வாட்டர் ப்ரூஃப் ஆகியவை இதன் ஹைலைட்ஸ்.
பல உடல் பயிற்சிகளை டிராக் செய்வதில் பிளஸ் மார்க் வாங்கினாலும், அந்த டேட்டாக்களில் உள்ள தவறுகள் அதிகமாக இருப்பது ஒரு மைனஸ். மொத்தத்தில், இந்த ரேஞ்சில் இருக்கும் மற்ற ஸ்மார்ட்வாட்ச்களோடு ஒப்பிடும்போது, 20,000 ரூபாய்க்கு கிடைக்கும் வெர்சா ஒரு நல்ல சாய்ஸ்.
பிளஸ்:
மைனஸ்:
ரேட்டிங்:
டிசைன் - 4.5
டிராக்கிங் - 2.5
மற்ற அம்சங்கள் - 4
பணத்து ஏற்ற மதிப்பு - 3
மொத்தம் - 3.5
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்