Apple Watch Series 5 ஸ்மார்ட்வாட்ச் கடந்த செவ்வாய்கிழமை ஆப்பிள் நீறுவனத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் உடன், ஐபோன் 11. ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 10.2-இன்ச் ஐபாடும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆப்பிள் வாட்சின் முக்கிய சிறப்பம்சமாக எப்போதுமே ஆப்-ஆகாத ரெடினா திரை, OLED திரை ஆகியவை பார்க்கப்படுகிறது. இந்த வாட்சின் இந்திய விலை, எப்போது விற்பனை என்பன பற்றியான விவரங்கள் உள்ளே...
Apple Watch Series 5 (GPS) விலை இந்தியாவில் 40,900 ரூபாய் என்ற அளவிலிருந்து துவங்குகிறது. அதே நேரத்தில், Apple Watch Series 5 (GPS + Cellular) விலை 49,900 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. இவை செப்டம்பர் 27ல் இருந்து இந்தியாவில் விற்பனையாகவுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்வார்ச்களின் அறிமுகத்தின் மூலம், முந்தைய ஸ்மார்ட்வாட்ச்களான Apple Watch Series 3 (GPS) 20,900 ரூபாய் எனவும், Apple Watch Series 3 (GPS + Cellular) 29,900 ரூபாய் எனவும் விலை குறைப்பை பெற்றுள்ளது.
அமெரிக்காவில் Apple Watch Series 5 (GPS) விலை 399 டாலர்கள் (சுமார் 28,700 ரூபாய்) என்ற அளவிலிருந்து துவங்குகிறது. அதே நேரத்தில், Apple Watch Series 5 (GPS + Cellular) விலை 499 டாலர்களில் (சுமார் 38,900 ரூபாய்) ஆரம்பிக்கிறது. முந்தைய ஸ்மார்ட்வாட்ச்களான Apple Watch Series 3 (GPS) 199 டாலர்கள் (சுமார் 14,300 ரூபாய்) எனவும், Apple Watch Series 3 (GPS + Cellular) 299 டாலர்கள் (சுமார் 21,500 ரூபாய்) எனவும் விலை குறைப்பை பெற்றுள்ளது.
Apple Watch Series 5 (GPS) ஆப்பிள் தளம் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் செயலியில் செப்டம்பர் 20 முன்பதிவிற்கு கிடைக்கப்பெறும். அமெரிக்கா, புவேர்ட்டோ ரிக்கோ, யு.எஸ். விர்ஜின் தீவுகள் மற்றும் 38 நாடுகளில் இந்த ஸ்மார்ட்வாட்ச் முன்பதிவிற்கு கிடைக்கும்.
Apple Watch Series 5 | விலை (அமெரிக்காவில்) | விலை (இந்தியாவில் |
---|---|---|
Apple Watch Series 5 (GPS, 40mm, Aluminium) | 399 டாலர்கள் | 40,900 ரூபாய் |
Apple Watch Series 5 (GPS, 44mm, Aluminium) | 429 டாலர்கள் | 43,900 ரூபாய் |
Apple Watch Series 5 (GPS + Cellular, 40mm, Aluminium) | 499 டாலர்கள் | 49,900 ரூபாய் |
Apple Watch Series 5 (GPS + Cellular, 40mm, Aluminium) | 529 டாலர்கள் | 52,900 ரூபாய் |
Apple Watch Series 5 (GPS + Cellular, 40mm, Stainless Steel) | 699 டாலர்கள் | 65,900 ரூபாய் |
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm, Stainless Steel) | 749 டாலர்கள் | 69,000 ரூபாய் |
Apple Watch Series 5 (GPS + Cellular, 40mm, Titanium) | $799 டாலர்கள் | இல்லை |
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm, Titanium) | 849 டாலர்கள் | இல்லை |
Apple Watch Series 5 (GPS + Cellular, 40mm, Ceramic) | 1299 டாலர்கள் | இல்லை |
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm, Ceramic) | 1349 டாலர்கள் | இல்லை |
Apple Watch Hermès Series 5 (GPS, 40mm, Stainless Steel) | 1249 டாலர்கள் | இல்லை |
Apple Watch Hermès Series 5 (GPS, 44mm, Stainless Steel) | 1299 டாலர்கள் | இல்லை |
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்