புதிய அப்டேட்களுடன் வெளியாகிய அமேசான் கிண்டில் (10வது தலைமுறை)!

புதிய அப்டேட்களுடன் வெளியாகிய அமேசான் கிண்டில் (10வது தலைமுறை)!

இந்த மாடல் பட்ஜெட் மாடலாக இருக்கவே, இது தண்ணீர் புகா வசதியை பெறவில்லை

ஹைலைட்ஸ்
  • மூன்பதிவுக்கு மட்டூம் வெளியான 'தி கிண்டில்' !
  • வைய்-ஃபைய் மற்றும் முகப்பு 'லைட்' வசதியை கொண்டுள்ளது!
  • இந்த தயாரிப்பு ரூ.7,999க்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
விளம்பரம்

நவீன புத்தக வாசிப்பாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான அமேசான் கிண்டில் தனது புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'தி கிண்டில்' (10 வது தலைமுறை) என்றழைக்கப்படும் இந்த தயாரிப்பு 6 இஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் முகப்பில் 'லைட்' கொண்டுள்ளது.

இந்த புதிய கிண்டில் தயாரிப்பு தற்போது முன்பதிவுக்கு வெளியாகியுள்ள நிலையில் ரூ.7,999க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் தற்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் டெல்லிவரி செய்யப்படும்.

இதற்கு முன்னர் வெளியான கிண்டில் (8வது தலைமுறை) பட்ஜெட் மாடல் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த மாடலில் முகப்பு 'லைட்' வசதி இடம் பெறவில்லை. அதுபோல் கிண்டிலின் மற்றோரு மாடலான கிண்டில் பேப்பர் வொய்ட் (10 வது தலைமுறை) ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கிண்டில் மாடல் பேப்ர் வொய்ட் நிறத்தில் இருப்பதால் நம்மால் இதை இருட்டில் பயன்படுத்த இயலாது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள  'தி கிண்டில்' (10 வது தலைமுறை) மாடல் பட்ஜட் கிண்டிலில் ப்ரைட்னெஸை மாற்றும் வசதி இருக்கிறது.

 'தி கிண்டில்' (10 வது தலைமுறை) 4ஜிபி சேமிப்பு வசதி மற்றும் வைய்-ஃபை வசதியும் பெற்றுள்ளது. 

 இந்த  'தி கிண்டில்' மாடலின் சிறப்பு அம்சமாக இதனின் பேட்டரி ஆயுள் இருக்கும். இதை ஒரு முரை சார்ஜ் செய்வதன் மூலம் நம்மால் ஒரு மாதம் வரை பயன்படுத்த முடியும். இந்த வசதி இதுவரை எவ்வித கிண்டில் மாடலிலும் இருக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

முன்பதிவுக்கு மட்டுமே வெளியாகியுள்ள இந்த  'தி கிண்டில்' (10வது தலைமுறை) மாடல் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அறிமுகமாகியுள்ளன. இந்த மாடல் பட்ஜெட் மாடலாக இருக்கவே, இது தண்ணீர் புகா வசதியை பெறவில்லை. சுமார் 174 கிராம் எடையுள்ள இந்த கிண்டில் 6- இஞ்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் இதில் குட்ரீட்ஸ், விஸ்பர்சிங்க், எக்ஸ்-ரே மற்றும் ஸ்மார்ட் லூக் அப் போன்ற பல அம்சங்கள் இருக்கின்றன.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Kindle, Kindle 10th Gen, Amazon
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »