ஃபிட்னஸ் பிரியர்களுக்கான அமேஸ் ஃபிட்டின் ஸ்மார்ட் வாட்ச்! 20 நாட்கள் தாங்கும் பேட்டரி பவர்

ஃபிட்னஸ் பிரியர்களுக்கான  அமேஸ் ஃபிட்டின் ஸ்மார்ட் வாட்ச்! 20 நாட்கள் தாங்கும் பேட்டரி பவர்

50 மீட்டர் ஆழம் வரையிலும் இந்த வாட்ச் நீர் உள்ளே செல்லாத பாதுகாப்பு அம்சத்தை கொண்டது.  இதன் எடை 58 கிராம். 

ஹைலைட்ஸ்
  • Amazfit T-Rex launched in India for Rs. 9,999
  • It is available on Amazon and Amazfit.com
  • Amazfit T-Rex has passed 12 regulations on military grade testing
விளம்பரம்

ஃபிட்னஸ் பிரியர்களுக்காக தொடர்ந்து ஸ்மார்ட் வாட்சுகளை வெளியிட்டு வரும் அமேஸ் ஃபிட், தனது அடுத்த தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ச்சுக்கு Amazfit T-Rex என பெயரிடப்பட்டுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக ஃபிட்னஸ் வாட்சுகள் உடற் பயிற்சி பிரியர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ஒரே வாட்ச்சில் அனைத்து அம்சங்களும் இருப்பதால் அவர்கள் நேரம் பார்ப்பதற்கென தனி வாட்சுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

நடைபயிற்சியை காட்டும் ஸ்பீடோ மீட்டர், இதய துடிப்பு காட்டும் கருவி, இரத்த  அழுத்தம் பார்ப்பது, தூங்கும் நேரம் அறிவது உள்ளிட்ட அதிகம் பயன்படும் அம்சங்கள் இந்த ஃபிட்னெஸ் வாட்சுகளில் அடங்கியுள்ளன. 

அந்த வகையில் தொடர்ந்து ஃபிட்னஸ் ஸ்மார்ட் வாட்ச்சுகளை வெளியிட்டு வரும் அமேஸ் ஃபிட் Amazfit T-Rex என்ற புதிய வாட்சை சந்தைக்கு கொண்டுவந்துள்ளது.

இதன் விலை ரூ. 9,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஆர்மி பச்சை, கேமோ பச்சை, காக்கி, ராக் ப்ளாக் ஆகிய வண்ணங்களில் இந்த வாட்சுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அமேசான் ஆன்லைன் மற்றும் அமேஸ்பிட்டின் அதிகாரப்பூர்வ இணைய தளம் ஆகியவற்றில் இந்த வாட்சுகளை பெற்றுக் கொள்ளலாம்.

360*360 அளவுள்ள அமோல்டு  டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன. 390 ஆம்ப் திறன் கொண்ட இதன் பேட்டரி, வாட்சை தினசரி பயன்படுத்தினாலும் கூட 20 நாட்களுக்கு சார்ஜ் தாங்கும். 

பயன்பாட்டில் இல்லாவிட்டால் 66 நாட்களுக்கு சார்ஜ் தாக்குப் பிடிக்கும். அதே நேரம் தொடர்ந்து ஜி.பி.எஸ்.ஐ ஆன் செய்து வைத்திருந்தால், 20 மணி நேரத்தில் சார்ஜ் காலியாகி விடும். 

50 மீட்டர் ஆழம் வரையிலும் இந்த வாட்ச் நீர் உள்ளே செல்லாத பாதுகாப்பு அம்சத்தை கொண்டது.  இதன் எடை 58 கிராம். 

ப்ளூடூத் வி5.0 இதில் உள்ளது. 14 வகையான ஸ்போர்ட்ஸ் அம்சங்கள் டி ரெக்ஸ் வாட்சில் பொருத்தப்பட்டுள்ளன. இதயத் துடிப்பு, உடற்பயிற்சி நேரம், காலநிலை,  தொலைப்பேசி அழைப்புகள், மொபைல் வழியாக பணம் செலுத்துதல் போன்ற பல சிறப்பு வசதிகளை கொண்டதாக வந்துள்ளது இந்த Amazfit T Rex.


OnePlus 8 vs Mi 10 5G: Which Is the Best 'Value Flagship' Phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazfit
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »