இந்தியாவில் வெளியாக இருக்கும் சையோமி ஸ்மார்ட் வாட்சுகள் தேதி அறிவிப்பு

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 18 ஜூலை 2018 14:07 IST

இந்த ஆண்டு ஜூலை மாதம் சையோமி நிறுவனத்தை சேர்ந்த ஹுஆமி, அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அமேஸ்ஃபிட் பிப், ஸ்டிராடோஸ் மாடல்களை வரும் ஜூலை 24 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.  ஆண்டுராய்டு, ஐஓஎஸ் போன்களில் ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம், சதுர வடிவில் இருக்கும் அமேஸ்ஃபிட் பிப், 99 அமெரிக்க டாலர்களுக்கும் (6,800 ரூபாய்), வட்ட வடிவிலான அமேஸ்ஃபிட் ஸ்டிராடோஸ் ஸ்மார்ட் வாட்ச் 199.99 அமெரிக்க டாலர்களுக்கும் (13,600 ரூபாய்) அறிமுகம் செய்யப்பட்டது
 

ஹுஆமி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் ஸ்மார்ட் வாட்சுகளின் அறிவிப்பை வெளியிட்டது. 

அமேஸ்ஃபிட் பிப் குறிப்புகள்

Advertisement

1.28 இன்ச் ஆன்-கலர் டிஸ்ப்ளே 176x176 பிக்சல் ரிசல்யூசனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே ஸ்கிரீன் 2.5டி கொரிலா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது. ஐபி68 சான்றிதழ் கொண்ட பிபிஜி ஹார்ட் ரேட் சென்சார், ஆக்செலரேஷன் சென்சார், ஜியோமாக்னெடிக் சென்சார், பாரோமெட்ரிக் சென்சார், ஜிபிஎஸ் ஆகியவை கொண்டுள்ளது. மேலும் 190mAh லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், நான்கு மாதங்கள் வரை தாங்க கூடிய பேட்டரி பேக்-அப் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர் பயன்பாட்டின் போது, 30 நாட்களுக்கு வரை பேட்டரி தாங்கும் என ஹூஆமி அறிவித்துள்ளது

அமேஸ்ஃபிட் ஸ்டிராடோஸ் குறிப்புகள்

1.34 இன்ச் வட்ட வடிவிலான டிஸ்ப்ளே 300x300 பிக்சல் ரிசல்யூசனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே ஸ்கிரீன் 2.5டி கொரிலா கிளாஸ்  பாதுகாப்பு கொண்டுள்ளது. 1.2GHz டூயல் கோர் SoC, 512எம்பி RAM , 4 ஜிபி  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. ஆர் ப்ரசர் சென்சார், ஆம்பியண்ட் லைட் , ஜிரோஸ்கோப், ஜியோமாக்னெடிக் சென்சார், ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சர் ஆகியவை கொண்டுள்ளது. மேலும், வாட்டர் ரெசிஸ்டண்ட் 290mAh லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டது. 

Advertisement

இரண்டு ஸ்மார்ட் வாட்சுகளுமே ஸ்டிராப் சேஞ்ச் வசதி,  ப்ளூடூத் v4.0 LE கனெக்டிவிட்டி வசதிகள் கொண்டுள்ளது. கூடுதலாக, ஸ்டிராடோஸ் ஸ்மார்ட் வாட்சில் Wi-Fi 802.11 b/g  கொண்டுள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazfit Bip, Amazfit Stratos, Amazfit, Huami, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.