சன் குழுமத்துடன் இணையும் வோடபோன் மற்றும் ஜடியா நிறுவனங்கள்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 29 ஜனவரி 2019 14:11 IST
ஹைலைட்ஸ்
  • வோடவோன் பிளே மற்றும் ஜடியா மூவிஸ் & டிவி ஆப்களில் வரும் புதிய கண்டன்ட்
  • சன் குழுமத்தின் நிகழ்ச்சிகளை வோடபோன் வாடிக்கையாளர்கள் பார்க்கலாம்
  • 4000 திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் சன் என்.எக்ஸ்.டில் உள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று வோடபோன் ஜடியா நிறுவனம்,  ஓவர் தி டாப் (OTT platform ) என்னும் இணையத்தில் வெளியாகும் நிகழ்ச்சிகளை வெளியிடும் (சன் என்.எக்ஸ்.டி) சன் தொலைக்காட்சி குழுமத்துடன் இணைய முடிவெடுத்துள்ளது.

50,000 மணிநேரம் வரை நிகழ்சிகளை ஒளிபரப்பு செய்துவரும் சன் என்.எக்ஸ்.டி ஆப் இனி வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி பிராந்திய மொழிகளான தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் சன் குழுமத்தின் நிகழ்ச்சிகளை வோடவோன் பிளே மற்றும் ஜடியா மூவிஸ் & டிவி ஆப்களில் பார்க்க முடியும்.

Advertisement

இந்த இணைப்பு மூலம் தென்இந்திய மொழிகளில் அதிகமாக நிகழ்ச்சிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் என்.எக்ஸ்.டி சேனல் பொருத்தவரை சுமார் 30 நேரலை சேனல்களும், 4000 திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் பல்வேறு பாடல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் சன் என்.எக்ஸ்.டி வீடியோ தளத்தில் இடம்பெற்றுள்ளது.

‘சன் குழுமத்துடன் இணைய பெறும் மகிழ்ச்சியடைகிறோம்.  இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான மொழியில் நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து அவர்களால் வோடபோன் மற்றும் ஜடியா ஆப்களில் பார்க்க முடியும். மேலும் தனது சொந்த மொழியில் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு விரும்புவார்கள்.  அதன் மூலம் எங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நல்லிணக்கம் ஏற்படும்' என வோடபோன் மற்றும் ஜடியா நிறுவனத்தின் தலைமை மார்கெட்டின் அதிகாரி சஷி சங்கர் தெரிவித்தார்.

கடந்த 2017-ல் அறிமுகம் செய்யப்பட்ட சன் என்.எக்ஸ்.டி, தென் இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. பிரபல திரைப்படங்களான 96, டிக்-டிக்-டிக், ராஜாகுமாரா, ஜெய் லவ குசா வாங்கியுள்ள நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான நாயகி, லட்சுமி ஸ்டோர்ஸ், கல்யாண வீடு மற்றும் கண்மணி போன்ற தொடர்களும் சன் என்.எக்ஸ்.டி ஆப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.