வோடபோன் ஐடியா டேட்டா கட்டணங்கள் அதிரடி உயர்வு! 

வோடபோன் ஐடியா டேட்டா கட்டணங்கள் அதிரடி உயர்வு! 

வோடபோன் ஐடியா, ஏப்ரல் 1, 2020 முதல் குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ.50 என நிர்ணயித்துள்ளது

ஹைலைட்ஸ்
  • வோடபோன் ஐடியாவின் குறைந்தபட்ச கட்டணங்கள் ஒரு ஜிபிக்கு ரூ.35 ஆகும்
  • மாதாந்திர கட்டணங்களுடன் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா ஆகும்
  • நிறுவனம், ரூ.53,000 கோடி ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையை கட்ட போராடி வருகிறது
விளம்பரம்

வோடபோன் ஐடியா, மொபைல் டேட்டாக்கான குறைந்தபட்ச கட்டணங்களை ஒரு ஜிபிக்கு ரூ.35 என நிர்ணயித்துள்ளது. இது முந்தைய விலையை விட சுமார் 7 மடங்கு உயர்வாகும். மேலும், ஏப்ரல் 1 முதல் மாதாந்திர கட்டணங்களுடன் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்று நிர்ணயித்துள்ளது. இது சட்டரீதியான நிலுவைத் தொகையை செலுத்த உதவுகிறது. கடந்த சில வாரங்களில் இந்நிறுவனம் சந்தைப் பங்கு வீழ்ச்சியடைந்து, அரசாங்கத்திற்கு ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்தியதன் காரணமாக பெரிய இழப்புகள் உள்ளிட்ட நிதி துயரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, ரூ.53,000 கோடி மொத்த வருவாய் நிலுவைத் தொகையை செலுத்த போராடி (Struggling) வருகிறது. நஷ்டத்தை ஈட்டிய டெல்கோ 18 ஆண்டு கால அவகாசத்தை கோரியுள்ளது, இதில் வட்டி மற்றும் அபராதம் செலுத்துதல் தொடர்பான மூன்று ஆண்டு கால அவகாசம் உட்பட என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொலைத் தொடர்புத் துறைக்கு (Department of Telecommunications) எழுதிய கடிதத்தில், டேட்டாக்களின் குறைந்தபட்ச விலையை ஒரு ஜிகாபைட்டுக்கு ரூ.35 ரூபாய் மற்றும் ஏப்ரல் 1, 2020 முதல் குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ.50 என நிர்ணயித்துள்ளது. தற்போதைய மொபைல் இணைய விலைகள் ஒரு ஜிபிக்கு ரூ.4-5 என்ற வரம்பில் உள்ளன.

ஆதாரங்களின்படி, வெளிச்செல்லும் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என்று வோடபோன் ஐடியா நிர்ணயித்துள்ளது.

சந்தையில் ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட பிற ஆபரேட்டர்களுடன் வோடபோன் ஐடியாவிலிருந்து அழைப்பு மற்றும் இணைய விகிதங்களை உயர்த்துவதற்கான கோரிக்கை, நிறுவனம் விகிதங்களை 50 சதவீதம் வரை உயர்த்திய மூன்று மாதங்களுக்குள் வருகிறது.  

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone Idea, DoT
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »