வோடபோனின் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ப்ளான்கள் அறிமுகம்! 

வோடபோனின் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ப்ளான்கள் அறிமுகம்! 

வோடபோன் ரூ.218 ரீசார்ஜ் ப்ளானுக்கு 6ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது

ஹைலைட்ஸ்
  • வோடபோன் இரண்டு ப்ளான்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது
  • ரூ.218, ரூ.248 ப்ளான்களின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்
  • இந்த ப்ளான்கள், டெல்லி & ஹரியானா வட்டாரங்களில் மட்டுமே செயலில் உள்ளன
விளம்பரம்

வோடபோன் இந்தியாவில் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ப்ளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.218 மற்றும் ரூ.248 ப்ரீபெய்ட் ப்ளான்கள் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் கிடைக்கின்றன. மேலும், இந்த பேக்குகள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகின்றன. இதில் வோடபோன் பயனர்களுக்கான ஜீ5 சந்தா மற்றும் வோடபோன் ப்ளே சந்தா ஆகியவை அடங்கும். இந்த புதிய வோடபோன் ப்ளான்கள் டெல்லி மற்றும் ஹரியானா வட்டாரங்களில் மட்டுமே தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவை நிறுவனத்தின் இணையதளத்தில் அல்லது My Vodafone செயலி வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. வோடபோன் ரூ.299, ரூ.399, மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் ப்ளான்களில் டபுள் டேட்டா ஆஃபர் அறிமுகப்படுத்திய பின்னர், புதிய ப்ளான்கள் விரைவில் வெளியாகும்.

புதிய வோடபோன் ரூ.218 ப்ரீபெய்ட் ப்ளான், அன்லிமிடெட் அழைப்புகள் (எந்த நெட்வொர்க்குக்கும் உள்ளூர் மற்றும் தேசிய), மொத்த டேட்டா 6 ஜிபி, 28 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது. அதோடு, வோடபோன் ப்ளே (ரூ.499 விலை) மற்றும் ஜீ5 (ரூ.999) ஆகியவற்றின் சந்தாவை இந்த பேக் வழங்குகிறது. மறுபுறம், புதிய வோடபோன் ரூ. 248 ப்ரீபெய்ட் ப்ளான், அன்லிமிடெட் அழைப்புகள் (எந்த நெட்வொர்க்குக்கும் உள்ளூர் மற்றும் தேசிய), மொத்த டேட்டா 8 ஜிபி மற்றும் 28 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது. இந்த ப்ளானும் ஜீ5 மற்றும் வோடபோன் ப்ளே சந்தாக்களையும் வழங்குகிறது.

குறிப்பிட்டுள்ளபடி, இந்த பேக்குகள் இப்போது டெல்லி மற்றும் ஹரியானாவில் மட்டுமே செயல்படுகின்றன. அதே ப்ளான்கள் அதன் சந்தாதாரர்களுக்கான ஐடியா இணையதளத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளன, டெல்லி மற்றும் ஹரியானா வட்டாரங்களில் மட்டுமே நேரலையில் உள்ளன. ஜீ5 மற்றும் வோடபோன் ப்ளே, ஐடியா வாடிக்கையாளர்களுக்குப் பட்டியலிடப்படவில்லை. இந்த புதிய ரீசார்ஜ் ப்ளான்கள் முதலில் ட்ரீம்டீடிஎச் கண்டுபிடித்தது. இருப்பினும், வோடபோன் மற்றும் ஐடியா தளங்கள் மூலம் ப்ளான்களின் இருப்பை கேட்ஜெட்ஸ் 360 சரிபார்க்க முடிந்தது.

idea small Idea

புதிய ப்ளான்கள், டெல்லி மற்றும் ஹரியானா வட்டங்களுக்கு மட்டுமே இப்போது கிடைக்கின்றன
டபுள் டேட்டா சலுகையைப் பற்றி பேசுகையில், ரூ.249, ரூ.399, மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் கட்டண ப்ளான்களுக்கு கூடுதலாக 1.5 ஜிபி அதிவேக டேட்டா தினசரி அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் பொருள் ரூ.249 ப்ரீபெய்ட் ப்ளான், 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு மொத்தம் 3 ஜிபி அதிவேக டேட்டாவாக இருக்கும். அதே நேரத்தில் ரூ.399 ப்ரீபெய்ட் ப்ளான் 56 நாட்களுக்கு 3 ஜிபி அதிவேக தினசரி டேட்டாவை கொண்டுவரும். ரூ.599 ப்ரீபெய்ட் ப்ளானுடன், பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி கூடுதல் அதிவேக டேட்டாவை 84 நாட்களுக்குப் பெறலாம்.
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »