Vodafone Idea வியாழக்கிழமை அதன் அனைத்து போஸ்ட்பெய்ட் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வோடபோன் ரெட் பிராண்டிங்கின் கீழ் பிரத்தியேகமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இதன் பொருள் என்னவென்றால், அனைத்து புதிய போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களும் நேரடியாக வோடபோன் ரெட் ப்ளான்களுக்கு அனுப்பப்படுவார்கள். முன்பு ஐடியா நிர்வணா ப்ளானை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் நேரடியாக இதேபோன்ற வோடபோன் ரெட் ப்ளான்களுக்கு இடம்பெயர்வார்கள். ஐடியா போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த மாற்றம் பொருந்தும் என்று டெல்கோ ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவை தங்கள் இந்திய நடவடிக்கைகளை ஆகஸ்ட் 2018-ல் முடித்ததிலிருந்து, புதிய நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது. இந்த நடவடிக்கை, அடிப்படையில் வோடபோன் ஐடியாவின் போஸ்ட்பெய்ட் சலுகைகளில் இருந்து ஐடியா பிராண்டிங் அகற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டத்தின்படி, Vodafone மற்றும் Idea பிராண்டுகளின் அனைத்து கடைகளிலிருந்தும் டிஜிட்டல் சேனல்களிலிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு Vodafone Red போஸ்ட்பெய்ட் ப்ளான்கள் கிடைக்கும் என்று புதிய நடவடிக்கையை அறிவிக்கும் போது, வோடபோன் ஐடியா குறிப்பிடப்பட்து. இந்த மாற்றம் ஆரம்பத்தில் மும்பையில் தொடங்கி அடுத்த சில மாதங்களில் அனைத்து வட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் ஒரு கட்டமாக வெளியிடப்படும்.
அனைத்து வட்டங்களிலும் அந்தந்த சில்லறை கடைகள் மற்றும் டிஜிட்டல் சேனல்கள் வழியாக தனித்தனி வோடபோன் மற்றும் ஐடியா பிராண்டுகளின் கீழ் ப்ரீபெய்ட் தயாரிப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என்பதையும் வோடபோன் ஐடியா சிறப்பித்தது.
ஐடியா வாடிக்கையாளர்கள் தற்போது நிர்வணா 399 மற்றும் நிர்வணா 499 போஸ்ட்பெய்ட் ப்ளான்களைக் கொண்டுள்ளனர், அவை இரண்டும் அவற்றின் சமமான மதிப்புள்ள வோடபோன் ரெட் ப்ளான்களுக்கு இணையான பலன்களை வழங்குகின்றன. இருப்பினும், Amazon Prime மற்றும் Netflix (Basic) போன்ற சேவைகளுக்கான கூடுதல் சலுகைகள் மற்றும் ஆண்டு சந்தாக்களுடன், ரூ.999 ரெட்எக்ஸ் லிமிடெட் எடிஷன் போஸ்ட்பெய்ட் ப்ளானையும் வோடபோன் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், வோடபோன் ஐடியா தனது வோடபோன் ரெட் போஸ்ட்பெய்ட் போர்ட்ஃபோலியோவை விரிவாக்கியது, இது குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ரெட் டுகெதர் ப்ளான்களைக் கொண்டு வந்தது. டெல்கோ சமீபத்தில் தனது ரூ. 649 iPhone Forever plan-ஐ நிறுத்தியது. இது குறிப்பாக ஐபோன் பயனர்களுக்கு சேவையை மையமாகக் கொண்ட பலன்களை வழங்க, கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.
"வோடபோன் ரெட் பிராண்டின் கீழ் எங்கள் போஸ்ட்பெய்ட் சலுகைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு நிறுவனத்தின், ஒரு நெட்வொர்க்கின் கருப்பொருளை நாங்கள் எடுத்து வருகிறோம்" என்று வோடபோன் ஐடியாவின் சந்தைப்படுத்தல் இயக்குனர் அவ்னேஷ் கோஸ்லா (Avneesh Khosla) கூறினார். "பல பயனர் நட்பு விலை புள்ளிகளில் விரிவான ப்ளான்களுடன், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெ உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகள், அதிக டேட்டா, இலவச சர்வதேச அழைப்புகள், இலவச வோடபோன் ப்ளே, அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிக்ஸ் மற்றும் பிற பிரத்யேக பலன்கள் உள்ளிட்ட வகுப்பு தொலைத் தொடர்பு மற்றும் மதிப்பு பலன்களில் சிறந்ததை எதிர்பார்க்கலாம்".
வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவை தங்களது இணைப்பை மார்ச் 2017-ல் அறிவித்தன, அது 2018-ல் நிறைவடைந்தது. வோடபோன் ஐடியா என மறுபெயரிடப்பட்ட இந்த கூட்டு முயற்சி, இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டராக உருவெடுத்தது - ரிலையன்ஸ் ஜியோவுக்குப் பிறகு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்