ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. அதற்கான சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. இப்போது இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனமாக இந்த இணை உருவாகியுள்ளது.
தொலை தொடர்பு உலகில் முன்னணியில் இருக்கும், ஏர்டெல் மற்றும் விலை போரை தொடங்கி வைத்த ஜியோ நிறுவனத்துக்கும் கடும் போட்டியாக ஐடியா-வோடாஃபோன் இணை உருவாகியுள்ளது.
இந்த இணை உருவாக 1.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நிறுவனங்களுக்கும் வருமான பகிர்வு 40% ஆகவும், ஏர்டெல்லை விட அதிகமாக வாடிக்கையாளர்கள் (40 கோடி) பெற்று முதலிடத்தில் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிற்வனத்தில் 12 போர்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். குமாரமங்கலம் பிர்லா இதன் சேர்மேனாக இருப்பார். பலேஷ் ஷர்மா தலைமை செயல் அதிகாரியாக இருப்பார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்