8 நகரங்களில் டபுள் டேட்டா ஆஃபரை நிறுத்தியது வோடபோன் ஐடியா! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 17 ஏப்ரல் 2020 13:35 IST
ஹைலைட்ஸ்
  • வோடபோன் ஐடியா, டபுள் டேட்டா ஆஃபரை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது
  • வோடபோன் ஐடியா செயல்படும் 22 நகரங்களிலும் இது கிடைத்தது
  • இருப்பினும், வோடபோன் ஐடியா இப்போது அதன் கிடைப்பைக் கட்டுப்படுத்தியுள்ளது

வோடபோன் ஐடியா, வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கான டபுள் டேட்டா ஆஃபரைக் கொண்டு வந்தது

Vodafone India தனது டபுள் டேட்டா ஆஃபரை 8 நகரங்களில் நிறுத்தியுள்ளது. இந்த ப்ளான், 22 தொலைத் தொடர்பு நகரத்திலிலுந்து 14 நகரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 


ப்ளான் விவரங்கள் & டபுள் டேட்டா ஆஃபர்:

வோடபோன் மற்றும் ஐடியா, வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியுடன் ரூ.249, 56 நாட்கள் செல்லுபடியுடன் ரூ.399 மற்றும் 84 நாட்கள் செல்லுபடி ரூ.599 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்களை, தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் கொண்டுவந்தது. மூன்று ப்ளான்களும் தற்போது கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா பலன்கள் என்பதால், இது டபுள் டேட்டா ஆஃபர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மூன்று ப்ளான்களும் Vodafone வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 சந்தாக்களுக்கான அணுகலை வழங்குகின்றன. Idea பயனர்கள், ஐடியா மூவிஸ் மற்றும் டிவி செயலியை அணுகலாம்.


டபுள் டேட்டா ஆஃபர்கள் நிறுத்தப்பட்ட நகரங்கள்:

ஆந்திரா, பீகார், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கோவா, வடகிழக்கு, பஞ்சாப் மற்றும் உ.பி. மேற்கு ஆகிய நகரங்கள், வோடபோன் இந்தியா தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Vodafone Idea-வின் டபுள் டேட்டா ஆஃபரின் மாற்றத்தைக் OnlyTech என்ற வலைப்பதிவு முதலில் கண்டறிந்தது. வோடபோன் ஐடியா ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டபுள் டேட்டா ஆஃபரை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone Idea, Vodafone, Idea
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கூகுள் ஐஓ 2026: ஜெமினி 3.5 ஃப்ளாஷ் முதல் ஜெமினி ஆம்னி வரை அறிவிக்கப்பட்ட அனைத்தும் இங்கே
  2. ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுக காலவரிசை கசிந்தது, சீன மாடலின் அதே அம்சங்களை தக்கவைக்க வாய்ப்பு
  3. சியோமி 17T, 17T ப்ரோ மே 28 அறிமுகத்திற்கு முன் விலை, விவரங்களுடன் சில்லறை விற்பனை தளத்தில் கசிந்தது
  4. அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் HD அறிமுகம்: 1080p ஸ்ட்ரீமிங், எக்ஸ்பாக்ஸ் கேமிங் ஆதரவு, விலை விவரங்கள்
  5. மோட்டோ பட்ஸ் 2 அறிமுகம்: 48 மக் பேட்டரி, 11மிமீ டூயல் டிரைவர், விலை & அம்சங்கள்
  6. மோட்டோ G37, மோட்டோ G37 பவர் இந்தியாவில் டைமென்சிட்டி 6400 சிப்செட்டுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. அமேசான் அலெக்சா+ இப்போது தேவைக்கேற்ப AI-மூலம் இயங்கும் பாட்காஸ்ட் (Podcast) எபிசோடுகளை உருவாக்க முடியும்
  8. இன்ஸ்டாகிராம் இன்ஸ்டன்ட்ஸ் (Instagram Instants)விளக்கம்:இது என்ன, எப்படி வேலை செய்கிறது, அம்சங்கள் மற்றும் பல
  9. ரூ.5,000-க்குள் இந்தியாவின் சிறந்த இயர்பட்ஸ்: ஒப்போ என்கோ பட்ஸ் 3 ப்ரோ+, ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ
  10. ரூ.30,000-க்குள் இந்தியாவின் சிறந்த போன்கள்: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6, மோட்டோரோலா எட்ஜ் 70 மற்றும் சில
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.