தினமும் 2ஜிபி கூடுதல் ’டேட்டா’… ஜியோவின் ஆஃபர் கொண்டாட்டம்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 27 நவம்பர் 2018 12:13 IST
ஹைலைட்ஸ்
  • ஜியோவின் கொண்டாட்டம் ஆஃபர் நீட்டிக்கப்பட்டுள்ளது
  • தினசரி டேட்டா சலுகை இதன் மூலம் கிடைக்கும்
  • ஜியோ தொடர்ந்து அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது.

ஜியோவின் கொண்டாட்டம் ஆஃபர் திட்டம் சில பயணாளர்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது

ஜியோவின் ‘கொண்டாட்டம் ஆஃபர் திட்டம்' சில பயணாளர்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 2 ஜிபி டேட்டா விகிதம் வழங்கப்பட உள்ளது. 5 நாட்களுக்கு இந்த டேட்டாவின் வேலிடிட்டி இருக்கும். முதன்முதலாக இதே திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, 10ஜிபி டேட்டாவை நான்கு நாள் வேலிடிட்டியில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஆஃபர் குறித்து வாடிக்கையாளர்கள் ஜியோ ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு ஜியோ தன் வாடிக்கையாளர்கள் 149 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 100 சதவிகிதம் கேஷ்பேக் ஆஃபர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது 10 ஜிபி டேட்டா 5 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் ஜியோ ஆஃபர் கொண்டாட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சலுகை குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் சலுகை விவரங்களை மை ஜியோ ஆப் மூலம் ‘மை ப்ளான்' பகுதியில் சென்று அறிந்துகொள்ளலாம். நவம்பர் 30-ம் தேதி வரையில் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தக் கொண்டாட்ட ஆஃபர் ஜியோவின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு தற்போது வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Reliance Jio, Jio Celebrations Pack, Reliance, Jio
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.