டெலிகாம் கமிஷன் நெட் நியூட்ராலிட்டிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது அதிகாரத்தை கொண்டு இணைய சேவையை நிறுத்தவோ, வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. கடந்த 2016 ஆம் ஆண்டு, நெட் நியூட்ராலிட்டி விவகாரம் முக்கிய விவாதப்பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது
“இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையத்தின் பரிந்துரைப்படி நெட் நியூட்ராலிட்டிக்கு டெலிகாம் கமிஷன் அனுமதி அளித்துள்ளது” என்று தகவல் தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.
2018 தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு பாலிசி என்ற புதிய திட்டத்திற்கும் டெலிகாம் கமிஷன் அனுமதி அளித்துள்ளது
“இன்றைய பொதுக்கூட்டத்தில், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் வளர்ச்சி மிக முக்கியமானது என அனைவரும் கருத்து தெரிவித்தனர். நகரப்புறங்களில் டிஜிட்டல் சேவை வசதிகளை விரைவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நிதி அயோக் தலைவர் (அமிதாப் கண்ட்) தெரிவித்தார்” என்று அருணா தெரிவித்தார்
2018 டிசம்பர் மாதத்திற்குள், 6000 கோடி ரூபாய் செலவில், நாட்டில் உள்ள பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் 12.5 லட்சம் வைஃபை ஹாட் ஸ்பாட்டுகள் அமைக்க டெலிகாம் கமிஷன் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்