ஜியோ தனது அதிரடி ஆஃபரால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100 சதவீத கேஷ் பேக் ஆஃபர் மற்றும் வருடாந்திர ரீசார்ஜ் பேக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. 1,699க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு 1.5ஜிபி டேட்டாவினை 4ஜியில் ஒரு நாளைக்கு 1.5ஜிபி என்ற வீதத்தில் பெறலாம். இப்போது இந்த ஆஃபர் பயன்பாட்டில் உள்ளது.
மேலும், தீபாவளியின் போது அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் 100 சதவீத கேஷ் பேக்கினை கொடுக்கிறது. இது எல்லாவிதமான ரீசார்ஜ் பிளானிலும் கிடைக்கும். இதற்கான டிஜிட்டல் கூப்பன்கள் மைஜியோ ஆப்பில் கிடைக்கும்.
ஜியோ தீபாவளி 100 சதவீத கேஷ் பேக் ஆஃபர்
ஜியோ அறிவித்துள்ள விழாக்கால சலுகையான 100 சதவீத கேஷ்பேக்கினை 100ரூபாய்க்கு மேல் செய்யப்படும் அனைத்து ரீசார்ஜ்களிலும் பெறலாம். ஜியோவின் இந்த ஆஃபரினை ரூ,149, ரூ198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.449, ரூ.498, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1699, ரூ.4999 மற்றும் ரூ9999 ரீசார்ஜ் பேக்குகளில் பெறலாம்.
ஜியோவின் பிரைம் வாடிக்கையாளராக நீங்கள் நீடிக்கும் பட்சத்தில் உங்களுடைய மை ஜியோ ஆப்பில் இதற்கான ரிலையன்ஸ் டிஜிட்டல் கூப்பன்கள் கிடைக்கும்.
ஜியோ வருடாந்திர ரீஜார்ஜ்
ஜியோவின் புதிய ஆஃபரில் ரூ.1699க்கு ரீசார்ஜ் செய்தால் 547.5ஜிபி டேட்டாவினை ஒரு நாளைக்கு 1.5ஜிபி என்ற வீதத்தில் பெறலாம். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்.எம்.எஸ்கள் மற்றும் அனைத்து ஜியோ எண்டர்டெயின்மெண்ட் ஆப்களையும் இலவசமாக அணுக முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்