இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் மேட்ச்களை ஜியோ டிவியில் காணலாம்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 22 செப்டம்பர் 2018 16:26 IST
ஹைலைட்ஸ்
  • ஜியோவும், ஸ்டார் இந்தியாவும் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளன
  • 20 ஓவர், ஒண்டே, டெஸ்ட், உள்ளூர் போட்டிகள் ஒளிபரப்பாகும்
  • ஜியோவின் போட்டி நிறுவனமான ஏர்டெல் டிவியும் கிரிக்கெட்டை ஒளிபரப்புகிறது

ஜியோ டிவி ஆப்

கிரிக்கெட் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்திருக்கிறது ஜியோ நிறுவனம். இந்தியா விளையாடிய முக்கிய மேட்சுகள் அனைத்தும் ஜியோ டிவியில் கண்டு களிக்கும் வகையில் ஜியோவும், ஸ்டார் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஏற்கனவே லைவ் செய்யப்பட்ட 20 ஓவர் போட்டிகள், ஒண்டே, டெஸ்ட் மேட்சுகள் உள்ளிட்டவற்றை ஜியோ டிவியில் பார்க்கலாம். ஹாட்ஸ்டார் லைவ் செய்யும் மேட்சுகளையும் பார்க்க ஜியோ டிவி அனுமதி அளிக்கிறது.

இதே வசதியை போட்டி நிறுவனமான ஏர்டெல்லும் செய்து வருகிறது. இதுகுறித்து ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிவேக டேட்டாவுடன் மொபைலில் கண்டு ரசிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டிகளை ஜியோ டிவி ஒளிபரப்பு செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வசதியை பெற வேண்டும் என்றால் ஜியோ டிவி ஆப்புடன், பயனாளர்கள் ஆக்டிவான ஜியோ நம்பரையும் வைத்திருக்க வேண்டும். இதற்காக கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்று ஜியோ தெரிவித்துள்ளது.

ஸ்டார் இந்தியாவுடனான பார்ட்னர்ஷிப் குறித்து, ஜியோ இயக்குனர் ஆகாஷ் அம்பானி கூறகையில், இந்தியாவின் சிறந்த விளையாட்டு நிகழ்வுகளை ஒவ்வொரு இந்தியரும் சிறந்த தரத்துடன் கண்டு ரசிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் மூலமாக சிறந்த அனுபவத்தை ஜியோ பயனாளர்கள் பெறுவார்கள் என்றார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Reliance Jio

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.