டாடா ஸ்கை நிறுவனம், இந்தியாவில் பிராட் பேண்ட் சேவையை தொடங்கியுள்ளது. 12 நகரங்களில் இதன் சேவையை தொடங்கியுள்ளது. பல்வேறு பிளான்களில் 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவை அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோவின் ஜிகா ஃபைபருக்கு போட்டியாக இந்த டாடா ஸ்கை களம் இறங்கியுள்ளது. ஜிகா ஃபைபருக்கான முன்பதிவு தொடங்கிய போதும், டாடா ஸ்கை உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் வேகமாக தங்கள் சேவையை தொடங்கி வருகின்றன.
தற்போது மும்பை, டெல்லி, காசியாபாத், குர்கான், நொய்டா, தானே, புனே, போபால், சென்னை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் மிரா பயந்தர் ஆகிய 12 நகரங்களில் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவை கிடைக்கிறது.
உங்கள் பகுதியில் டாடா ஸ்கை சேவை இருக்கிறதா என்பதை, அந்நிறுவன இணையத்தளத்தில் உள்ள ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இப்போது பிராட்பேண்டுக்கான பிளான்களை பார்க்கலாம். ஒரு மாதத்துக்கு 5,10,30,50,100Mbps வேகத்தில் இணைய சேவையை முறையே, 999 ரூபாய், 1,150 ரூபாய், 1500 ரூபாய், 1,800 ரூபாய் மற்றும் 2500 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கூடுதலாக 999 ரூபாய்க்கு 60ஜி.பி டேட்டாவும், 1250 ரூபாய்க்கு 125ஜி.பி டேட்டாவும் வழங்கப்படுகிறது. முதல் முறை பதிவுக் கட்டணம் 1200 ரூபாய் செலுத்த வேண்டும்.
3 மாதத்துக்கு 5,10,30,50,100Mbps வேகத்தில் இணைய சேவையை முறையே, 2,997 ரூபாய், 3,450 ரூபாய், 4,500 ரூபாய், 5,400 ரூபாய் மற்றும் 7500 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
5 மாதத்துக்கு 5,10,30,50,100Mbps வேகத்தில் இணைய சேவையை முறையே, 4,995 ரூபாய், 5750 ரூபாய், 7,500 ரூபாய், 9000 ரூபாய் மற்றும் 12,500 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
9 மாதத்துக்கு 5,10,30,50,100Mbps வேகத்தில் இணைய சேவையை முறையே, 8,991 ரூபாய், 10,350 ரூபாய், 13,500 ரூபாய், 16,200 ரூபாய் மற்றும் 22,500 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
12 மாதத்துக்கு 5,10,30,50,100Mbps வேகத்தில் இணைய சேவையை முறையே, 11,988 ரூபாய், 13,800 ரூபாய், 18,000 ரூபாய், 21,600 ரூபாய் மற்றும் 30,000 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்