டெலிகாம் உலகில் ஜியோவின் வருகையால் மற்ற நிறுவனங்களுக்கு போட்டி அதிகரித்துள்ளது. ஜியோ குறைந்த விலையில் அதிகசேவைகள் அளிப்பதால் மற்ற நிறுவனங்களும் அதனுடன் போட்டி போட தங்களது விலையயும்குறைத்து வருகின்றன.
சமீபத்தில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பு ரீசார்ஜ்களுக்கான தொகையை குறைத்தது. அதன்படி அதிக சேவைகள்தற்போது குறந்த விலையில் கிடைக்கின்றன. தற்போது பிஎஸ்என்எல் நிறுவன பயனாளர்கள் 19 ரூபாய்க்கு இலவச கால் வசதிகளை 54 நாட்களுக்கு பயன்படுத்தலம்.
இந்த சேவை தமிழ்நாடு மற்றும் சென்னை பகுதியில் இருக்கும் பயனாளர்களுக்குப் பொருந்தும். வருகிற அக்டோபர் 11ம் தேதி வரைபயனாளர்கள் இந்தசேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே போல டெல்லி, மும்பைபகுதிகளில் ரோமிங் கட்டணங்கள்குறைக்கப்பட்டுள்ளன.
இதை தவிர 99 ரூபாய்க்கு செய்யப்படும் ரீசார்ஜில் இலவச ரோமிங் அழைப்புகள் தரப்படுகின்றன. இந்த ஆபர் 26 நாட்களுக்குநீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்