ட்ராய் அமைப்பின் புதிய முடிவால் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்!

விளம்பரம்
Written by Kunal Dua மேம்படுத்தப்பட்டது: 21 ஜூலை 2018 18:37 IST
ஹைலைட்ஸ்
  • வாடிக்கையாளர்களின் கால்களை கண்காணிக்கும் வசதி கேட்கும் ட்ராய்
  • அது வாடிக்கையாளர்களின் சேவை கொள்கைக்கு எதிரானது என்று மறுக்கிறது
  • இதனால் ஐபோன் வாடிக்கையாளர்கள் சேவை துண்டிக்கப்படலாம்.

இந்திய டெலிகாம் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு வாரியமான ட்ராய் அமைப்பு, ஆப்பிள் நிறுவனத்திடம் தனது செயலிக்கு ஐபோன்களின் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பார்க்கும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுள்ளது.

ஆனால், இது பயனாளர்களின் சேவை கொள்கைக்கு எதிரானது என்று ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Part of TRAI’s regulation reads:

Every Access Provider shall ensure, within six months’ time, that all smart phone devices registered on its network support the permissions required for the functioning of such Apps as prescribed in the regulations 6(2)(e) and regulations 23(2)(d);

Provided that where such devices do not permit functioning of such Apps as prescribed in regulations 6(2)(e) and regulations 23(2)(d), Access Providers shall, on the order or direction of the Authority, derecognize such devices from their telecom networks.

ஆப்பிள் நிறுவனம் விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதால், ஐபோன் வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்குமாறு டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவிடப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ட்ராய் அமைப்பின் சட்ட விதிமுறைகளான 6(2)(இ) மற்றும் 23(2)(டி) படி, ஏற்கனவே சொல்லப்பட்டு இருக்கும் விதிகளை ஆப்பிள் கடைபிடிக்க மறுப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் தெரிவிக்கையில், ஐஓஎஸ் 10 மற்றும், ஐஓஎஸ் 11, ஐஓஎஸ் 12 ஆகிய இயங்குதளங்களில் இதற்கான அனுமதி தரப்பட்டும், பல வாடிக்கையாளர்கள் பிரச்னையை சந்தித்து வருவதால் மீண்டும் இதுகுறித்து பாதுகாப்பு விஷயங்களை ட்ராய் அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ராய் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்குள்ளான இந்த மோதல், ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: TRAI, Apple
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  2. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  3. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  4. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  5. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  6. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  7. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  8. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  9. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  10. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.