இந்தியாவில், அரசுக்கு சொந்தமான டெல்கோ பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) புதிய ரூ. 1,999 பிராட்பேண்ட் ப்ளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் காம்போ ப்ளான் இப்போது ஒரு சில வட்டங்களில் நேரலையில் உள்ளது. மேலும் 200Mbps வேகத்தை வழங்குகிறது. இந்த திட்டம் தற்போது தெலுங்கானா மற்றும் சென்னை வட்டங்களில் விளம்பர அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த புதிய திட்டம் 1500GB அதாவது 1.5TB என்ற FUP டேட்டா வரம்பை வழங்குகிறது. இது பாரத் ஃபைபர் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாகும். FUP வரம்பை அடைந்த பிறகு, வேகம் 2Mbps-ஆக குறைகிறது.
குறிப்பிட்டுள்ளபடி, புதிய BSNL 1500GB CS55 பிராட்பேண்ட் ப்ளான், சென்னை மற்றும் தெலுங்கானா வட்டங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் குரல் அழைப்பு, 200Mbps வேகத்தில் 1.5TB டேட்டா பலன் ஆகியவை இந்த பலன்களில் அடங்கும். FUP வரம்பை அடைந்த பிறகு, வேகம் 2Mbps-ஆக குறைக்கப்படுகிறது. இருப்பினும், 2Mbps-ல் பதிவேற்றவும், பதிவிறக்கவும் வரம்பு இல்லை. பிராட்பேண்ட் ப்ளானுக்காக குறைந்தபட்ச வாடகை காலம் ஒரு மாதமாகும். மேலும், சந்தாதாரர்கள் ஒரு மாத கட்டணத்தையும் பாதுகாப்பு வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். இந்த பிராட்பேண்ட் ப்ளான், BSNL website-ல் நேரலையில் உள்ளது. மேலும், ஆர்வமுள்ள பயனர்கள் ஏப்ரல் 6, 2020 வரை இதற்கு சந்தார்கள் ஆகலாம். இந்த ப்ளான் நீண்ட காலத்திற்கு கிடைக்காது. அதாவது விளம்பர சலுகை காலக்கெடு முடிந்ததும் பயனர்கள் பிற ஆப்ஷன்களைத் தேட வேண்டும். இது முதலில் BSNL தொலைதொடர்பு நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், ரூ. 999 அமேசான் பிரைம் சந்தாவை, அனைத்து BSNL பாரத் ஃபைபர் ப்ளான்களும் இலவசமாக வழங்குகிறது. இந்தத் திட்டம் அதே பலன்களை அளிக்கிறதா இல்லையா என்பதில் எந்த தெளிவும் இல்லை. இந்த சமீபத்திய பிராட்பேண்ட் திட்டம், ஜியோ ஃபைபரின் ரூ. 2,499 பிராட்பேண்ட் திட்டம் 500Mbps வேகத்தை வழங்குகிறது. ஆனால் 1.25TB-ன் குறைந்த FUP. இருப்பினும், டெல்கோ தனது வெளியீட்டு சலுகையின் ஒரு பகுதியாக, முதல் ஆறு மாதங்களுக்கு 250GB டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. மேலும், ஜியோ ஃபைபர் கூடுதல் OTT சந்தாக்களையும் வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்