கொரோனா வைரஸ்: மொபைல் வேலிடிட்டியை நீட்டித்தது BSNL !

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 31 மார்ச் 2020 13:51 IST
ஹைலைட்ஸ்
  • பிஎஸ்என்எல் மொபைல் வேலிடிட்டி ஏப்ரல் 2 வரை நீட்டிக்கப்பட்டது
  • மார்ச் 22-க்குப் பிறகு காலாவதியான பிஎஸ்என்எல் பயனர்களுக்கானது
  • மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திங்களன்று மீண்டும் வலியுறுத்தினார்

பிஎஸ்என்எல் கடந்த வாரம் பயனர்களுக்கான ஒர்க் @ ஹோம் இணைய தொகுப்பை அறிவித்தது

coronavirus தொற்று காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதுதொடர்பாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மார்ச் 22-க்குப் பிறகு காலாவதியான பயனர்களுக்கு, இந்த வேலிடிட்டியை ஏப்ரல் 20 வரை நீட்டிப்பதால், அவர்கள் "தொடர்ந்து இன்கம்மிங் அழைப்புகளைப் பெறுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கும் ரூ.10-க்கு, இலவச டாக் டைமை வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

 "பிஎஸ்என்எல்லின் ப்ரீபெய்ட் சிம்கள் ஏப்ரல் 20 வரை நிறுத்தப்படாது. அவுட்கோயிங் காலுக்கு, இன்று முதல் ரூ.10 ஊக்கத்தொகை வழங்கப்படும்" என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். 

தொழில்நுட்ப நிறுவனங்களான, OnePlus, Realme மற்றும் ஹவாய் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையை எளிதாக்குவதற்காக, உத்தரவாத காலத்தை நீட்டிப்பதாக அறிவித்தன. இதேபோல், தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை COVID-19 சுய நோயறிதலுக்கான புதிய கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

"ஊரடங்கு காலத்தில், பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்வதற்கு" Go Digital " செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று BSNL, CMD பிரவீன் குமார் புர்வார் கூறினார். ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யவிருக்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் MyBSNL மொபைல் செயலி, பிஎஸ்என்எல் வலைத்தள சேவைகளைப் பயன்படுத்தலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL, Coronavirus, COVID 19
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பயன்படுத்திய போன் வாங்கப்போறீங்களா? பணத்தைச் செலவிடும் முன் இந்த விஷயங்களை உடனே சரிபார்க்கவும்!
  2. அலுமினியம் ஃபாயில் வீட்டு வைஃபை-ஐ மேம்படுத்தி, தேவையான இடத்தில் அதிவேக நெட்வொர்க்கை வழிநடத்தும்!
  3. ரியல்மி C100x இந்தியாவில் 8,000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்; விலை ரூ. 15,000-க்கு கீழ்
  4. OxygenOS-லிருந்து ColorOS-க்கு மாறும் ஒன்பிளஸ்; அமெரிக்கா, ஐரோப்பா செயல்பாடுகள் நிறுத்தம்!
  5. இந்தியாவில் ஆப்பிள் 'பேக் டு ஸ்கூல்' விற்பனை நேரலை; மேக்புக் ஏர், ஐபேட் ப்ரோ போன்றவற்றில் சலுகைகள்!
  6. சாம்சங் மியூசிக் ஸ்டுடியோ 5, மியூசிக் ஸ்டுடியோ 7 வை-பை ஸ்பீக்கர்கள் இந்தியாவில் அறிமுகம்
  7. அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் ஒன்பிளஸ்; இந்தியாவில் தொடரும்: 5 முக்கிய தகவல்கள்!
  8. திரை சேதமடைவதால் இந்தியாவில் 50% பேர் போன்களை மாற்றுகின்றனர்!
  9. ஒன்பிளஸ் N6 அறிமுகமான சில காலத்திற்குள் ஒன்பிளஸ் N6x இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது
  10. கோபோல்ட் டெனெட் ப்ரோ 32dB ANC, 75 மணிநேர பேட்டரி ஆயுளுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.