இந்தியாவில் ரூ.499 பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் ப்ளானை பிஎஸ்என்எல் பிப்ரவரி மாதம் அறிமுகபடுத்தியது. மார்ச் 31 அன்று காலாவதியாகும் இந்த ப்ளான் 20Mbps வேகத்தில் 100 ஜிபி டேட்டா பலன்களை வழங்குகிறது. ஆனால், பிஎஸ்என்எல், தற்போது விளம்பர பிராட்பேண்ட் ப்ளானின் கிடைப்பை ஜீன் 29 வரை நீட்டித்துள்ளது. பயனர்கள், இந்த ப்ளானை, நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து வாங்கலாம்.
இந்த ப்ளான், உச்ச வரம்பை அடைந்த பிறகு வேகம் 2Mbps ஆக குறைகிறது. எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் டேட்டா பதிவிறக்கம் மற்றும் அன்லிமிடெட் உள்ளூர் + எஸ்.டி.டி அழைப்புகளுடன் வருகிறது. இந்த ப்ளான், அந்தமான் மற்றும் நிக்கோபார் தவிர, அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது.
இந்த பிராட்பேண்ட் ப்ளான் அமேசான் பிரைம் சந்தாவுடன் வரவில்லை. BSNL, ரூ.499-க்கு மேல் உள்ள அனைத்து பிராட்பேண்ட் ப்ளான்களிலும், ரூ.999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தாவை வழங்குகிறது. கொடுக்கப்பட்ட ரூ.499 ப்ளான் ஒரு மாத சந்தா காலக்கெடுவுடன் மட்டுமே வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்