Airtel: 84 நாள் வெலிடிட்டியுடன் 2 புதிய ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்! 

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 2 ஜனவரி 2020 16:11 IST
ஹைலைட்ஸ்
  • ரூ.279 ப்ரீபெய்ட் ப்ளான், ரூ.4 லட்சம் கால காப்பீட்டைக் கொண்டுவருகிறது
  • Wynk Music & Xstream content-க்கான அணுகலையும் ஏர்டெல் வழங்குகிறது
  • ரூ.379 ஏர்டெல் ப்ரீபெய்ட் ப்ளான், 6 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது

ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவை ரூ. 279 மற்றும் ரூ. 379 ப்ளானை சேர்ப்பதன் மூலம் விரிவுபடுத்தியுள்ளது

பாரதி ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவை ரூ. 279 மற்றும் ரூ. 379 ப்ளான்களை சேர்த்துள்ளது. புதிய ப்ளான்கள் அதிவேக டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் செய்தி பலன்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும்,  Wynk Music மற்றும் Xstream apps-க்கான அணுகலை ஏர்டெல் வழங்குகிறது. இந்த தொடரில் ரூ. 279 ஏர்டெல் ப்ரீபெய்ட் ப்ளானும் HDFC Life-ல் இருந்து ரூ. 4 லட்சம் கால ஆயுள் காப்பீட்டைக் கொண்டுள்ளது. புதுடெல்லியை தளமாகக் கொண்ட டெல்கோ இந்தியாவில் அதன் கட்டணங்களை உயர்த்திய சில வாரங்களிலேயே ரூ. 279 மற்றும் ரூ.379 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் இணையதளத்தில் உள்ள பட்டியலின்படி, ரூ. 279 ப்ரீபெய்ட் ப்ளான் தினசரி 1.5 ஜிபி அதிவேக டேட்டா ஒதுக்கீடு மற்றும் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் குரல் அழைப்புகளுடன், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளுடன் கொண்டு வருகிறது. ப்ரீபெய்ட் ப்ளான் HDFC Life-ன் ஆயுள் காப்பீடு மற்றும் Shaw Academy-யில் இருந்து நான்கு வார படிப்புகள், Wynk Music அணுகல் மற்றும் Airtel Xstream மூலம் பிரீமியம் உள்ளடக்கம் போன்ற கூடுதல் பலன்களையும் கொண்டுவருகிறது. வாடிக்கையாளர்கள், FASTag வாங்கும்போது, ரூ. 100 கேஷ்பேக்கையும் பெறலாம்.

ரூ. 279 ப்ரீபெய்ட் ப்ளானுக்கு கூடுதலாக, ரூ. 379 ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் 6 ஜிபி அதிவேக டேட்டா அணுகல், 900 எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் குரல் அழைப்புகளை  வழங்குகிறது. இந்த ப்ளான் Shaw Academy, Wynk Music மற்றும் Airtel Xstream app-ல் இருந்து நான்கு வார படிப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. ரூ. 379 ப்ரீபெய்ட் ப்ளானும், FASTag வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 100 கேஷ்பேக்கை கொண்டுவந்துள்ளது.

ரூ. 379 ஏர்டெல் ப்ரீபெய்ட் ப்ளானானது வோடபோன் ஐடியா வழங்கும் ரூ. 379 ப்ரீபெய்ட் ப்ளானுக்கு எதிராக போட்டியிடுகிறது. பிந்தையது 84 நாட்கள் 1,000 எஸ்எம்எஸ் செய்திகளுடன், ஒரே மாதிரியான குரல் அழைப்பு மற்றும் அதிவேக டேட்டா பலன்களை வழங்கியது.

ஏர்டெல்லின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து Telecom Talk முதலில் அறிவித்தது. இருப்பினும், கேஜெட்ஸ் 360 அதிகாரப்பூர்வ ஏர்டெல் வலைத்தளத்தின் மூலம் இரண்டு புதிய ப்ளான்களையும் சுயாதீனமாக சரிபார்க்க முடிந்தது. 

Airtel, Vodafone Idea New Plans Live: How the Updated Prepaid Recharge Plans Compare

Airtel New Plans: Prepaid Prices Hiked, Long-Term Tariffs Start at Rs. 1,498

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Rs 279 Airtel plan, Rs 379 Airtel plan, Airtel prepaid, Airtel, Bharti Airtel
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  2. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  3. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  4. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  5. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  6. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
  7. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  8. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
  9. மடக்கும் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! Motorola Razr 60 அடுத்த வாரமே இந்தியாவில்
  10. Vi-ன் அதிரடி: 'Nonstop Hero' திட்டம் டேட்டாவுக்கு இனி லிமிட் இல்லை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.