ஏர்டெலில் மூன்று நாட்களுக்கு இலவச டேட்டா!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 28 ஜூலை 2020 12:31 IST
ஹைலைட்ஸ்
  • Airtel offered 4GB data instead of 3GB on Rs. 48 recharge to a subscriber
  • Users are being initiated of the additional data via a text message
  • Jio recently rolled our 2GB daily data for four days to select users

குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது

ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு 1ஜிபி டேட்டா இலவசமாக வழங்குகிறது.

ஏர்டெல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு தற்போது சிறப்பு ஆஃபர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 1ஜிபி கூடுதல் டேட்டா பெற முடியும். பொதுவாக 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா வழங்கப்படும். ஆனால், தற்போது கூடுதலாக 1ஜிபி டேட்டா வழங்கப்பட்டு, 4ஜிபி டேட்டாவாக வழங்கப்படுகிறது.

இந்த ஆஃபர் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் இல்லை. சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஏர்டெல் தரப்பில் ஆஃபர் மெசேஜ் வரும். அவர்கள் இந்தச் சலுகையைப் பெற முடியும். மேலும், இவ்வாறு வழங்கப்படும் 1ஜிபி கூடுதல் டேட்டா ஆஃபரின் வேலிடிட்டி 3 நாட்கள் ஆகும். எனவே, இந்த ஆஃபர் பெறும் வாடிக்கையாளர்கள் மூன்று நாட்கள் வரையில் 1ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.  ஏர்டெலின் இந்த ஆஃபர் ஜியோவின் டேட்டா ஆஃபரை ஒத்துக் காணப்படுகிறது.

இது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதால், மற்ற வாடிக்கையாளர்கள் 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 3ஜிபி டேட்டா மட்டுமே பெற முடியும். மாறாக 4ஜிபி டேட்டா பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏர்டெலில் இதே போல் 49 ரூபாய்க்கான ரீசார்ஜ் பேக் உள்ளது. அதில் 38.52 ரூபாய்க்கு டாக் டைம், 100MB டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திலும் 1 ஜிபி ஆஃபர் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Airtel, Airtel Free Data, Airtel 1GB Free DAta
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சார்ஜ் போட மறந்தாலும் கவலை இல்ல! Oppo K14x 5G-ல அசுரத்தனமான 6500mAh பேட்டரி! விலை என்ன தெரியுமா?
  2. ஒன்பிளஸ் வெறியர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 13 விலையில 12,000 ரூபாய் அதிரடி குறைப்பு! இந்த சான்ஸ விட்றாதீங்க மக்களே
  3. iPhone-க்கு டஃப் கொடுக்க Samsung S26 ரெடி! எப்போ லான்ச்? என்னென்ன ஸ்பெஷல்? முழு விவரம் உள்ளே
  4. OnePlus-ல இவ்வளவு கம்மி விலையா? Pad 3 முதல் Buds Pro 3 வரை வாரி வழங்கும் சலுகைகள்
  5. பட்ஜெட் விலையில ஒரு தரமான 5G போன்! Lava Bold N2 இந்தியாவிற்கு வராரு.. மத்த பிராண்ட்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க
  6. டேட் குறிச்சாச்சு! Samsung Galaxy S26 பிப்ரவரி 25-ல் லான்ச்.. சாம்சங் வலைதளத்திலேயே லீக் ஆன ரகசிய தகவல்
  7. ஒருவழியா வந்தாச்சு! வாட்ஸ்அப் வெப்-ல இப்போ டைரக்டா வீடியோ கால் பேசிக்கலாம்.. அந்த 'Desktop App' தலைவலி இனி வேண்டாம்
  8. ஐபோன் 16 இப்போ இன்னும் சீப்பா கிடைக்குது! வேலண்டைன்ஸ் டே முன்னிட்டு ரூ. 8,000 வரை தள்ளுபடி.. இந்த சான்ஸை விட்றாதீங்க
  9. Infinix-ல இப்படி ஒரு போனா? Note 60 Pro டீசர் வந்தாச்சு.. அந்த மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே டிசைன் செம மாஸ்
  10. கீழே விழுந்தாலும் ஒன்னும் ஆகாது! மிலிட்டரி கிரேடு பலத்துடன் Itel A100 வந்தாச்சு.. நெட்வொர்க் இல்லாமலேயே பேசலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.