ஹவாய் மேட்பேட் டேப்லெட் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த டேப்லெட் இரண்டு கலர் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. டேப்லெட்டின் விலை மற்றும் விவரங்களை இங்கே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Huawei MatePad-ன் வைஃபை வேரியண்ட் மாதிரி எண் BAH3-W09 உடன் வருகிறது.
4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 1,899 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20,420),
6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை சிஎன்ஒய் 2,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,640) ஆகும்.
Huwaei மேட்பேட்டின் LTE + Wi-Fi வேரியண்ட் மாடல் எண் BAH3-AL00 உடன் வருகிறது.
இதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 2,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,870).
புதிய டேப்லெட் ஃப்ரிட்டிலரி வைட் மற்றும் நைட் ஆஷ் கலர் ஆப்ஷன்களில் சீனாவில் கிடைக்கிறது.
இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 10 உடன் EMUI 10.1-ல் இயக்குகிறது. இது 2,560x1,600 பிக்சல்கள் தெளிவுதிறன் கொண்ட 10.4 அங்குல ஐபிஎஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. திரையில் மெல்லிய பெசல்கள் மற்றும் செல்ஃபி கேமராவுக்கு இடமளிக்க ஒரு ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு உள்ளது. இந்த டேப்லெட் ஹவாய் கிரின் 810 SoC-யால் இயக்கப்படுகிறது. இதில் 6 ஜிபி ரேம் உள்ளது.
டேப்லெட்டின் முன் மற்றும் பின் பேனல்களில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஃபிளாஷ் உடன் வருகிறது. மேலும், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதனை, பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். ஹவாய் மேட்பேட்டில் 7,250 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. இது 245.2x154.96x7.35 மிமீ அளவு மற்றும் 450 கிராம் எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்