ஆப்பிள் நிறுவனம் நியூயார்க் நகரில் வரும் அக்.30ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு பத்திரிகை அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் என்ன நடைபெறும், எதனை எதிர்பார்க்கலாம் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. இருப்பினும், ஐபேட் ப்ரோ மற்றும் மேக் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஒரு வாரமாக வதந்திகள் பரவி வருகின்றன.
தயாரிப்பில் இன்னும் பல இருக்கிறது, கேட்ஜெட்ஸ் 360க்கு ஆப்பிள் விடுத்த அழைப்பில், ப்ளூ கலர் ஆப்பிள் லோகோவில் உயரமான கட்டடங்கள் அதன் நடுவே உள்ளது. இது நியூயார்க் வானலைகளில் இருப்பது போல் உள்ளது. இந்த சிறப்பு படமானது ஒவ்வொரு அழைப்பிலும் மாறுபடுகிறது. சமூக வலைதளங்களில் நாங்கள் பார்த்த ஒரு அழைப்பில் அது எங்களுக்கு வந்தது போல் இல்லை.
ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன் எக்ஸ் வெளியீட்டின் போது அறிமுகப்படுத்திய, பேஸ் ஐடி டெக்னாலஜியுடன் கொண்ட தனது புதிய ஐபேட் ப்ரோவை தற்போது வெளியிட உள்ளது. இந்த புதிய ஐபேட் மாடலில் யூஎஸ்பி டைப் - சி போர்ட் கொண்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம், தனது மலிவு விலை மேக் ஆப்பிள் நோட்புக் வரிசையில் மேம்படுத்தப்பட்ட மேக்புக் ஏர்-ஐ ரூ.83.990 வெளியிட உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்