மார்க் சக்கர்பெர்க் இப்போது உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர்

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 7 ஜூலை 2018 13:13 IST

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், வாரென் பஃபெட்டை முந்தி உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் ஆகியுள்ளார். டெக்னாலிஜி தான் உலகை ஆளும் என்று நிரூபித்துள்ள மார்க் சக்கர்பெர்க்கோடு சேர்ந்து, முதல் மூன்று பணக்காரர்களும் டெக் உலகின் வித்தகர்களாவர். முதல் முறையாக முதல் மூன்று இடத்தையும் டெக்னாலஜி நிறுவனர்கள் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

34 வயதாகும் சக்கர்பெர்க்கின் மதிப்பு இப்போது 81.6 பில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 5.61 லட்சம் கோடி ரூபாய். இது வாரென் பஃபெட்டின் மதிப்பை விட 2,565 கோடி ரூபாய் அதிகம்.

டேட்டா பிரைவஸி பிரச்சனைகளால், ஃபேஸ்புக் பல நெருக்கடிகளை சந்தித்து வந்தபோதும், முதலீட்டாளர்களின் ஆதரவு ஃபேஸ்புக்குக்கு தொடர்ந்து இருந்தது. மார்ச் 27-ம் தேதி, 8 மாதங்களில் இல்லாத அளவு, 152.22 டாலர்களாக குறைந்தது. ஆனால் நேற்று வத்தக நேர முடிவில், ஃபேஸ்புக்கின் பங்குகள் உச்சத்தை தொட்டு, 203.23 (13,975.11) டாலர்களாக உயர்ந்தது.

டாப் 500 உலக் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் புளூம்பர்க் நிறுவனம், இந்த பட்டியலில் டெக் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் மதிப்பு 5 டிரில்லியன் டாலர்கள் (344 லட்சம் ரூபாய்) என்கிறது.

ஒரு காலத்தில் உலகின் பெரும் பணக்காரராக இருந்த வாரென் பஃபெட்டின் சொத்து மதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. 2006-ம் ஆண்டு முதல் பல நன்கொடைகளை அவர் செய்து வருவதே அவரது சொத்து மதிப்பு குறைய காரணம். அவரது பெர்க்‌ஷைர் ஹாத்வே நிறுவனத்தில் இருந்த 290 மில்லியன் ஷேர்களை பில் கேட்ஸின் தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக அளித்துள்ளார். அவர் கொடுத்த நன்கொடையின் இன்றைய மதிப்பு 3.44 லட்சம் கோடிகள் என்கிறது புளூம்பெர்க். மார்க் சக்கர்பெர்க்கும், தன் வாழ்நாளில், தனக்கு ஃபேஸ்புக்கில் இருக்கும் 99% பங்குகளை நன்கொடையாக அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook, Mark Zuckerberg
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. NFC ஆதரவுடன் ஆஃப்லைன் யுபிஐ கட்டண வசதி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்
  2. விவோ S2 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்: விளம்பர போஸ்டர் கசிந்தது
  3. டெல் ஏலியன்வேர் 16X அரோரா, 16 & 18 ஏரியா-51 இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
  4. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 தொடர் விவரங்கள் கசிந்தன; புரோ மேக்ஸ் மாடலில் டைமன்சிட்டி 9600 புரோ சிப்செட் இடம்பெறலாம்!
  5. டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5G டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  6. 150W சவுண்ட் மற்றும் 4 EQ மோட்களுடன் போர்ட்ரானிக்ஸ் பியூர் சவுண்ட் புரோ X2 ஹோம் தியேட்டர் இந்தியாவில் அறிமுகம்
  7. ஷியோமி பவர் பேங்க் 5i 20000mAh இந்திய அறிமுக தேதி உறுதி; முக்கிய அம்சங்கள், விவரங்கள் வெளியீடு!
  8. 9-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டத்துடன் மோட்டோ பேட் 70 குரூவ் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!
  9. சாம்சங் 'பேக் டூ ஸ்கூல்' விற்பனை: கேலக்ஸி S26, டேப் S11 அல்ட்ரா உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
  10. கூகுளின் ஃபிட்பிட் ஏர் (Fitbit Air) அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக அமேசான் இந்தியாவில் கண்டறியப்பட்டது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.