தவறான தகவல் என்ற காரணத்துக்காக ஒரு பதிவை நீக்கமாட்டோம்: ஃபேஸ்புக்

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 11 ஆகஸ்ட் 2018 01:04 IST

போலியான தகவல்களைக் கொண்ட பதிவுகளால் தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி ஆபத்து விளைவிப்பது பற்றி உலகெங்கும் அச்சம் பரவி வருகிறது. எனினும் ஃபேஸ்புக் நிறுவனமோ, “தவறான தகவல் இருப்பதாலேயே ஒரு பதிவை நீக்குவதில்லை” என்று அறிவித்துள்ளது.

தனிநபர் தாக்குதல்கள், வெறுப்புணர்வை விதைக்கும் பதிவுகளுக்கு எதிராக விதிமுறைகளைக் கொண்டிருந்தாலும், தகவல் பிழை கொண்ட பதிவுகளைத் தணிக்கை செய்யும் வழக்கம் ஃபேஸ்புக்கில் இல்லை என்று அந்நிறுவனத்தில் கொள்கை மேலாண்மைத் தலைமை அதிகாரி மோனிகா பிக்கர்ட் தெரிவித்துள்ளார்.

Advertisement

“ ஒருவர் தவறான தகவலைக் கூறுவதாலேயே அப்பதிவை நீக்குவதில்லை. அவை வைரலாகாமல் இருக்க அதற்கு எதிர்த்தரப்பு கருத்துக்கொண்ட பதிவுகளையும் முன்னிலைப்படுத்துவோம். ஆனால் எவ்வளவு அப்பட்டமான பொய்யாக இருந்தாலும் சரி, ஜெர்மனியில் நாசிப்படைகள் நிகழ்த்திய இன அழிப்பு பற்றி மறுத்துக் கூறும் பொய்யாக இருந்தாலும் சரி, நாங்கள் அவை தவறான தகவல் என்ற ஒரே காரணத்துக்காக நீக்கமாட்டோம்” என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகள், பொய்ச்செய்திகளால் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஃபேஸ்புக்கின் இக்கருத்து சூட்டைக் கிளப்புவதாக உள்ளது.

எனினும் உள்ளூர் நடைமுறைகளை ஃபேஸ்புக் பின்பற்றி, அதன்படி பதிவுகளை நீக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். “அந்தந்த நாட்டு அரசுகள் சில வகையான பதிவுகள் அங்கு சட்டவிரோதம் என்று கூறினால், அக்குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நாங்கள் அப்பதிவை நீக்குவோம்” என்று மோனிகா தெளிவுபடுத்தியுள்ளார்
 
 
 
 
 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook, fake news
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.