போலியான தகவல்களைக் கொண்ட பதிவுகளால் தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி ஆபத்து விளைவிப்பது பற்றி உலகெங்கும் அச்சம் பரவி வருகிறது. எனினும் ஃபேஸ்புக் நிறுவனமோ, “தவறான தகவல் இருப்பதாலேயே ஒரு பதிவை நீக்குவதில்லை” என்று அறிவித்துள்ளது.
தனிநபர் தாக்குதல்கள், வெறுப்புணர்வை விதைக்கும் பதிவுகளுக்கு எதிராக விதிமுறைகளைக் கொண்டிருந்தாலும், தகவல் பிழை கொண்ட பதிவுகளைத் தணிக்கை செய்யும் வழக்கம் ஃபேஸ்புக்கில் இல்லை என்று அந்நிறுவனத்தில் கொள்கை மேலாண்மைத் தலைமை அதிகாரி மோனிகா பிக்கர்ட் தெரிவித்துள்ளார்.
“ ஒருவர் தவறான தகவலைக் கூறுவதாலேயே அப்பதிவை நீக்குவதில்லை. அவை வைரலாகாமல் இருக்க அதற்கு எதிர்த்தரப்பு கருத்துக்கொண்ட பதிவுகளையும் முன்னிலைப்படுத்துவோம். ஆனால் எவ்வளவு அப்பட்டமான பொய்யாக இருந்தாலும் சரி, ஜெர்மனியில் நாசிப்படைகள் நிகழ்த்திய இன அழிப்பு பற்றி மறுத்துக் கூறும் பொய்யாக இருந்தாலும் சரி, நாங்கள் அவை தவறான தகவல் என்ற ஒரே காரணத்துக்காக நீக்கமாட்டோம்” என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகள், பொய்ச்செய்திகளால் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஃபேஸ்புக்கின் இக்கருத்து சூட்டைக் கிளப்புவதாக உள்ளது.
எனினும் உள்ளூர் நடைமுறைகளை ஃபேஸ்புக் பின்பற்றி, அதன்படி பதிவுகளை நீக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். “அந்தந்த நாட்டு அரசுகள் சில வகையான பதிவுகள் அங்கு சட்டவிரோதம் என்று கூறினால், அக்குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நாங்கள் அப்பதிவை நீக்குவோம்” என்று மோனிகா தெளிவுபடுத்தியுள்ளார்புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்