போலியான தகவல்கள் மற்றும் செய்திகள் பெருமாம்பாலும் படங்கள் சார்ந்ததாகவே பகிரப்படுவது அதிகரித்திருப்பதாகவும், இது வாசகர்களுக்கு குறிப்பிட்ட ஒரு செய்தி சார்ந்த புகைப்படம் அல்லது விடியோவின் உண்மைத்தன்மையை அறிவதை கடினமாக்கியிருக்கிறது என ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுபோன்று ஃபேஸ்புக்கில் பதியப்படும் ஃபோட்டோ மற்றும் வீடியோக்களின் இணைப்புகளின் உண்மைத் தன்மையை கண்டறிவதற்காக தொழில்நுட்பங்களை விரிவுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது ஃபேஸ்புக். போட்டோ மற்றும் வீடியோக்களின் உண்மைத் தன்மையை ஆய்ந்தறியும் வல்லுனர்களின் உதவியுடன், தவறான உள்ளடகம் கொண்ட பதிவுகளை நீக்கும் பணிபுரிந்து வருகின்றனர். உதாரணமாக, கடந்த காலத்தில் நடைபெற்ற இயற்கை பேரிடர் அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற புகைப்படங்களை நிகழ்கால சம்பவங்களோடு தொடர்புபடுத்தும் பதிவுகள் போன்றவற்றை ஃப்ளாக் செய்யவும் முடிவு செய்துள்ளது.
ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக பகிரப்படும் போலி செய்திகளை அடையாளம் காண மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பிளக்கில் குறிப்பிடுகையில் “ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக்கில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள், இணைப்புகள், வீடியோக்கள், தலவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன, அத்தனையும் மனித ஆற்றலால் பரிசோதனை செய்வது இயலாத காரியம்” எனவே தானியங்கி கருவிகள், ஏற்கனவே பொய் என நிருபிக்கப்பட்ட தகவல்களை பரப்பும் டொமைன் மற்றும் இணைப்புகளை கண்டுபிடிக்க உதவும். மேலும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபேஸ்புக் நிறுவனம், தேர்தல் மற்றும் ஜனநாயகத்தில் சமூக ஊடகங்களின் பங்கு என்ன என்பது பற்றியான சுதந்திரமான ஆய்வுகளுக்கு உதவி செய்வதற்காக புதிய திட்டம் ஒன்றை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தது. தேர்தல் ஆய்வுகளுக்கான பொறுப்பிலுள்ள ஆணையம் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு தேவையான ஆட்களை பணியமர்த்தி வருகிறது. வருகின்ற வாரங்களில் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி ஃபேஸ்புக்கில் உள்ள தவறான தகவல்களின் அளவு மற்றும் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு திட்டங்களை பெறப்போவதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. “காலப்போக்கில் இந்த ஆய்வுகள் எங்களைப் பொறுப்புடன் இருக்கவும், எங்களுடைய போக்கை கண்காணிக்கவும் உதவியாக இருக்கும்” என ஃபேஸ்புக் கூறியுள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மற்ற அறிவுப்புகளில் தொடர்ச்சியாக தவறான தகவல்களை பரப்புபவர்களை கண்டுபிடிப்பதும், மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் உண்மை கண்டறியும் தொடர்புகளை சர்வதேச அளவில் விரிவுபடுத்துவதும் அடங்கும்.
தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் கம்யூனிகேஷன் துறை பேராசிரியர் மைக் அனான்னி கூறுகையில், “இதுபோன்ற அறிவிப்புகள் சரியான திசையில் தான் செல்கின்றன, ஆனால் ஃபேஸ்புக் நிறுவனம் போலி செய்திகளின் பரவாலாக்கத்தை தடுப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்பதையும், தங்களுடைய மனித அற்றல் மற்றும் தானியங்கி கருவிகள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதையும் முழுமையாக தெரிவிக்கவில்லை” என்றார். மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் தங்களுடைய மெஷின் லேர்னிங் அல்காரிதம், இந்த தொழில்நுட்பங்களுக்கு என்ன பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன , அதற்குள்ளாக ஏதாவது கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனவா உள்ளிட்டவற்றை பகிர வேண்டும் அனான்னி பரிந்துரைத்துள்ளார்.
“ஃபேஸ்புக் நிறுவனம் இதழியலுக்கும், பொதுமக்களுக்கும் தன்னுடைய பொறுப்பு என்ன என்பதை அறியும் இந்த சிக்கலான பயணத்தில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டார். ஆனால் இந்த முயற்சிகளில் ஃபேஸ்புக் நிறுவனம் எவ்வாறு வெற்றியடையப் போகிறார்கள் என்பது கேள்விக்குறிகாகத் தான் இருக்கிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஃபேஸ்புக் நிறுவனம் எடுத்து வரும் போலி கணக்குகள், தவறான தகவல்கள் தடுப்பது மற்றும் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை மீட்பது போன்ற செயல்களின் தொடர்ச்சியாக சமீபத்திய அறிவிப்பும் வந்துள்ளது. “இந்த முயற்சிகள் முடிந்துவிடப் போவதில்லை, இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கின்றது” என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ரஷ்ய கணக்குகள், அமெரிக்காவில் உள்ள கலாச்சார வித்தியாசங்களை பயன்படுத்தி 2016 ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட 3000 அரசியல் விளம்பரங்கள் அமெரிக்கா நாடாளுமன்றத்திடம் ஃபேஸ்புக் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. ரஷ்ய விவகாரம், பரவி வரும் போலி செய்திகள் மற்றும் வதந்திகள் அவைகளை கட்டுப்படுத்தும் ஃபேஸ்புக்கின் செய்ல்கள் பற்றி தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
சமீப மாதங்களாக ஃபேஸ்புக் மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், பயனாளர்கள் தனிப்பட்ட தகவல்களின் பிரைவெசி மீது கடுமையாண விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவன பயனாளார்களின் தகவல்களை பயன்படுத்தியது தொடர்பான சர்ச்சைகள் வெளிவந்த பிறகு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஃபேஸ்புக் சட்டவல்லுனர்களால் பல கட்ட கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டது. பயனாளர்களின் தகவல்கள் பயன்படுத்தப்படுவது பற்றி அதிக வெளிப்படைத்தன்மை கையாளப்படும் என ஃபேஸ்புக் உறுதியளித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்