Apparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 20 செப்டம்பர் 2019 17:16 IST
ஹைலைட்ஸ்
  • முதற்கட்ட விசாரணையில் கொலையல்ல என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
  • தங்களது ஊழியர் தான் என்பதை பேஸ்புக் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
  • ஊழியர் தற்கொலை செய்து கொண்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது - பேஸ்புக்


அமெரிக்காவில், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து மென்லோ பார்க் போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மென்லோ பார்க்கில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பகல் 11.30 மணி அளவில், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்ற போது, அந்த நபர் எந்த அசைவுமின்றி கிடந்தார். தீயணைப்பு வீரர்களும், துணை மருத்துவர்களும் அவருக்கு மருத்துவ உதவிகளை வழங்கினர். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை. இதைத்தொடர்ந்து, அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டார் என அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், அதில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இது கொலையல்ல என்பதும் தற்கொலை தான் என்பதும் தெரியவந்துள்ளதாக மென்லோ பார்க் போலீசார் தெரிவித்துள்ளனர்.  

தற்கொலை செய்தவர் தங்களது ஊழியர் தான் என்பதை பேஸ்புக் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், போலீசார் அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பும் ஆதரவும் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.